எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் ஆனால் அரசியல் தெரியாது ; இப்போதைக்கு சமையல் மட்டுமே போதும் – முன்னாள் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவின் பிரத்தியேக பேட்டி

0
239
Suresh Raina

இந்திய கிரிக்கெட் வீரர்களில் தங்களுடைய கிரிக்கெட் கேரியரை முடித்தவுடன் ஒரு சிலர் மீண்டும் கிரிக்கெட்டில் களம் இறங்குவார்கள். பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக ஏதேனும் ஒரு துறையில் அவர்கள் பணிபுரிந்து இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மறுபக்கம் ஒரு சிலர் திரைப்படத்தில் அல்லது அரசியலில் குதிப்பார்கள். அவற்றையும் நாம் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்.

2019ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த அவரை இந்த ஆண்டு எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அவருடைய மனதிற்கு நெருக்கமான சென்னை அணியும் அவரை வாங்க முயற்சி செய்யாதது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான் அரசியலுக்கு வர மாட்டேன்

சமீபத்தில் சுரேஷ் ரெய்னாவிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா அரசியல் வரை உங்களுக்கு ஆசை இருக்கிறதா என்ற கேள்வி எடுத்து வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கிரிக்கெட் மட்டும் தான் எனக்கு தெரியும்,என் மனதிற்கு பிடித்த விளையாட்டு அது மட்டும் தான். கிரிக்கெட்டை மட்டுமே நான் காதலிக்கிறேன். மறுபக்கம் எனக்கு அரசியல் தெரியாது இன்னும் சொல்லப் போனால் எனக்கு சுத்தமாக அரசியல் புரியாது. எனவே அரசியலில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன்.

இப்போது எல்லா வகையான சமையலும் நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. எனவே நான் எல்லா வகையான சமையலும் சமைத்து ஒரு நல்ல குக்கிங் செஃப் ஆக வேண்டும் என்பதே என்னுடைய முழு விருப்பம்” என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா இல்லாத சென்னை அணியை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பார்க்கும் சக்தி தங்களுக்கு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு அவர் விளையாடவில்லை என்றாலும் வரும் ஆண்டுகளில் மாற்று வீரராக கூடிய விரைவில் ஏதேனும் ஒரு அணியில் அவர் விளையாடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -