“3 மாதத்திற்கு முன்பு தாயை இழந்தேன்.. அரைஇறுதி நாட்டிற்கும் குடும்பத்திற்கும் பெரிய விஷயம்!” – ஆப்கான் கேப்டன் உருக்கமான பேச்சு!

0
1004
Afghanistan

இன்று உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தலாக 31 ஓவரில் 180 ரன் இலக்கை விரட்டி நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.

ஏழாவது போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் 8 புள்ளிகள் எடுத்து, புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணியை யாராவது இடத்திற்கு தள்ளி, ஐந்தாவது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -

மேலும் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என பெரிய அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஒரு விஷயம் தான் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை கொஞ்சம் கேள்விக்குறியாக்குகிறது.

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணி மிடில் ஓவர்களில் சிறப்பான சுழற் பந்து வைத்து தாக்குதலை வைத்திருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெறவே முடியாது என்று சொல்ல முடியாது.

மேலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த உலகக் கோப்பை தொடரில் இலக்கை விரட்டி அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மூன்று வெற்றிகளும் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி கூறும்பொழுது “எங்கள் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே நான் பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் எங்களுடைய ரன் சேஸ் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இலக்கை வெற்றிகரமாக துரத்தி இருக்கிறோம்.

நாங்கள் இலக்கை துரத்தும் பொழுது, ஸ்கோர் போர்டையும், எதிர் அணியின் இலக்கையும் பார்க்கிறோம். அதன்படி விளையாடி நாங்கள் சாதித்து வருகிறோம்.

முகமது நபி ஒரு சிறப்பான வீரர். அவர் எப்போதும் தனது திறமையை வெளிப்படுத்துவார். அணிக்கு தேவைப்படும் பொழுதெல்லாம் அவர் இப்பொழுது போல பொறுப்பேற்றுக் கொள்ளுவார்.

நாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் எங்களுடைய வெற்றியை அனுபவிக்கிறோம். நாங்கள் அனைவருமே எங்களின் அடுத்த வெற்றி குறித்து சிந்திக்கிறோம்.

நிச்சயமாக அரை இறுதிக்கு முன்னேற நாங்கள் 100% கடுமையாக முயற்சி செய்கிறோம். அது மட்டும் நடந்தால் அது நாட்டிற்கு மிகப் பெரிய சாதனையாக இருக்கும். நான் மூன்று மாதத்திற்கு முன்பு என் தாயை இழந்தேன். இப்படி ஒரு வெற்றி வந்தால், அது என் குடும்பத்திற்கு நிம்மதியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!