என் ரன்கள் எங்கே இருக்கிறது என்றும், என் ஆட்டம் என்ன என்றும் எனக்கு நல்லாவே தெரியும்- ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ்!

0
7374
SKY

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் மும்பை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல்லின் அதிரடியான அரை சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 199 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இருநூறு என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் நெகில் வதேரா இருவரும பொறுப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக சூரியகுமாரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 35 பந்துகளை மட்டும் சந்தித்த அவர் 83 ரன்கள் குவித்து மிரட்டினார். இவரது ஆட்டத்தால் 10 ஓவர்கள் தாண்டி எங்கேயும் வெற்றிக்கான வாய்ப்பு பெங்களூர் அணிக்கு கிடைக்கவில்லை.

அவருக்கு மெதுவான பந்துகள் மூலம் பெங்களூர் அணி விரித்த வலையை மிக அற்புதமாக அறுத்து அணியை பதினாறு புள்ளி மூன்று ஓவர்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.

- Advertisement -

இந்த பங்களிப்பின் காரணமாக ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “அணியின் பார்வையில் இது மிகவும் தேவை. இதுபோன்று சொந்த மண்ணில் வெற்றியடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர்கள் என்னை வீழ்த்த ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதாவது வேகத்தை குறைத்து மைதானத்தின் பெரிய பக்கத்தில் என்னை அடிக்க வைக்க பார்த்தார்கள்.

நான் வதேராவிடம் பந்தை கேப்பில் அடித்து பலமாக ஓடுவோம் என்று கூறினேன். நீங்கள் ஆட்டத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதேபோல் உங்கள் பயிற்சியும் இருக்க வேண்டும்.

என்னுடைய ரன்கள் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நாங்கள் திறந்த வலையில் பயிற்சி செய்கிறோம். எனக்கு என் ஆட்டம் தெரியும். நான் எதையும் வித்தியாசமாக செய்யவில்லை!” என்று கூறி இருக்கிறார்!