என்ன ஷாட் ஆட வேண்டும் என்று எனக்கு நல்லாவே தெரியும் ; என் மனதில் இரண்டு ஷாட்கள்தான் இருந்தது – ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ்!

0
667
Suryakumar

இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் யாதவ் மும்பை ரசிகர்களுக்கு பேட்டிங் விருந்து படைத்தார்!

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா, இசான் கிஷான் மற்றும் வதேரா மூவரும் பவர் பிளே முடிந்ததும் அடுத்தடுத்து வெளியேற நெருக்கடி ஏற்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் அதிரடியாக தனது முதல் ஐபிஎல் சதத்தை 11 பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் பதிவு செய்து அசத்தினார். இதனால் மும்பை 20 ஓவர்களில் 218 ரன் குவித்தது. தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியால் 191 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் பேசும்பொழுது
“என்னுடைய சிறந்த டி20 ஆட்டத்தில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். நான் ரன்கள் எடுக்கும் போதெல்லாம் அணி வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எனது முதல் எண்ணம்.

மிக முக்கியமாக நாங்கள் இன்று முதலில் பேட்டிங் செய்தோம். 200 – 220 ரன்களை சேஸ் செய்வதாக இருந்தால் எப்படி விளையாடுவோமா அதேபோல் விளையாடலாம் என்று பேசிக்கொண்டோம்.

- Advertisement -

மைதானத்தில் நிறைய பனி இருந்தது. அது ஆரம்பத்தில் ஏழு எட்டு ஓவர்களின் போதே இருந்தது.

என்ன ஷாட்கள் அடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.நேராக அடிப்பது பற்றி நான் யோசிக்கவில்லை. என் மனதில் இரண்டு ஷாட்கள் இருந்தன. ஒன்று ஓவர் பைன் லெக், இன்னொன்று ஓவர் தேர்ட் மேன்.

விளையாட்டுக்கு முன் நிறைய நிறைய பயிற்சிகள் இருக்கிறது. எனவே நான் விளையாட வரும் பொழுது மிகவும் தெளிவாக இருக்கிறேன். மேலும் என்னை சரியாக வெளிப்படுத்திக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்!