“ரெண்டு தம்பிகளுக்கும் இந்த விஷயத்தை சொல்லி இருக்கேன்.. அவங்க பண்ணிடுவாங்க!” – சூரியகுமார் பேட்டி!

0
293
Surya

இன்று சூரியகுமார் யாதவ் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை அவர்கள் நாட்டில் வைத்து இந்திய அணி சந்திக்க இருக்கிறது. இந்த போட்டியில் டர்பன் நகரில் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

தற்பொழுது அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. எனவே மீதம் இருக்கின்ற சர்வதேச டி20 போட்டிகளில் இளம் வீரர்களை விளையாட வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஜெய்ஸ்வால், ருத்ராஜ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு பேட்டிங் வரிசையில் இடம் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்திய டி20 கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தற்போதைக்கு 5 பேர் இருக்கிறார்கள். இதில் இஷான் கிஷானும் ஒருவர். எனவே கீழ் வரிசையில் விளையாடும் விக்கெட் கீப்பர்தான் தேவை. எனவே ஜிதேஷ் சர்மா இந்த வாய்ப்பை கட்டாயம் பெறுவார்.

தற்பொழுது ஜெய்ஸ்வால் துவக்க இடத்தில் தன்னுடைய இடத்தை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறாரோ அதேபோல் ஃபினிஷிங் இடத்தில் ரிங்கு சிங் தன் இடத்தை உறுதி செய்து இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து அதிரடியாக 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். அந்தப் போட்டியில் 29 பந்தில் 46 ரன்களை ரிங்கு சிங்கும், 19 பந்துகளில் 35 ரன்களை ஜிதேஷ் சர்மாவும் அடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

தற்போது இவர்கள் இருவர் குறித்தும் பேசி உள்ள கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “தற்பொழுது ரிங்கு சிங் மற்றும் இதே சர்மா இருவரும் தங்கள் மாநில அணிக்காகவும் ஐபிஎல் அணிக்காகவும் எந்த இடத்தில் பேட்டிங் செய்தார்களோ அதே இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அங்கு என்ன செய்தார்களோ அதையே இங்கு செய்தால் போதும். அவர்கள் எதையும் வித்தியாசமாக செய்யத் தேவையில்லை.

ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் அவர்கள் இதையே செய்தார்கள். நாங்கள் சிக்கலில் இருந்த பொழுதெல்லாம் அவர்கள் தங்கள் கேரக்டரை காட்டினார்கள். அதே சமயத்தில் அவர்கள் அணியின் தேவைக்கேற்ப விளையாடினார்கள்.

இவர்கள் இருவருக்கும் ஒன்று சொன்னேன். நீங்கள் முதலில் அணிக்காக யோசித்து விளையாடுங்கள், அதற்கடுத்து உங்களது தனிப்பட்ட சாதனையை பார்த்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் சூழ்நிலை எளிதாக சரியாகும்!” என்று கூறினேன் என்று தெரிவித்திருக்கிறார்!