“விமர்சிக்கிற வாயை மூட வைக்க.. என்கிட்ட வழி இருக்கு” – வார்னர் கில்கிறிஸ்ட்கிட்ட சொன்ன மெசேஜ்!

0
289
Warner

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரே டேவிட் வார்னருக்கு கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இத்துடன் அவர் ஓய்வு பெற இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடக்க, டேவிட் வார்னருக்கு சொந்த மைதானமாக அது அமைய, அவருக்கு சிறந்த பிரிவு உபச்சார விழாவாக அது நிகழ்கிறது.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேவிட் வார்னர் ஒரு ஆண்டு விளையாடத் தடை பெற்றார். மேலும் அவர் விளையாட வந்த காலங்களில் களத்தில் எதிர் அணி வீரர்களுடன் ஆக்ரோஷமாக மோதும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். இதுவெல்லாம் அவருக்கு விமர்சனத்தை கொடுக்கக் கூடியதாக அமைந்தது.

இந்த நிலையில் அவருடன் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேவிட் வார்னருக்கு இந்த அளவில் பிரிவு உபச்சார விழாவை வைக்க கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் இது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

இப்படியான நிலையில்தான் இன்று ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

- Advertisement -

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 84 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்திருக்கிறார். உடன் விளையாடிய யாரும் அரைசதம் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் இன்றைய நாளின் முடிவுக்கு பின் ஆடம் கில்கிறிஸ்ட் இடம் பேசிய டேவிட் வார்னர் ” இங்கே வெளியே வந்து அதிரடியாக ரன்களை எடுப்பது என்னுடைய வேலை. இது பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் இருந்து உருவாகிறது. நான் முதலில் கவாஜா மற்றும் ஸ்மித் ஆகியோருடன் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் பெற்றேன்.

எனக்கு ஆஸ்திரேலியாவுக்காக மேலும் ஒரு டெஸ்ட் சதம் வந்திருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் விளையாட செல்லும் பொழுது எங்களால் முடிந்ததை செய்ய முயற்சி செய்கிறோம்.

இது மிகவும் நன்றாக இருக்கிறது. விளையாட்டில் எப்பொழுதும் விமர்சனங்கள் இருக்கும். மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியான விமர்சனங்களை நிறுத்துவதற்கு நீங்கள் ரன்கள் அடிப்பது தவிர வேறு வழியே கிடையாது. நான் அதைத்தான் செய்தேன்!” என்று கூறினார்!