“சில நேரம் தசைப்பிடிப்பு இருந்தது.. சில நேரம் நடிச்சேன்..!” – உண்மையை பதிங்கரமாக ஒத்துக் கொண்ட முகமது ரிஸ்வான்!

0
7907
Rizwan

ஆசியக் கோப்பை தொடரில் பெற்ற மோசமான தோல்விகளால் ஏற்பட்டிருந்த பாதிப்பில் இருந்து, பாகிஸ்தான் அணி இன்று இலங்கைக்கு எதிராக உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியின் மூலமாகத்தான் மீண்டு வந்திருக்கும்!

இன்று இலங்கை அணி டாஸ் வென்றதோடு தைரியமாக முதலில் பேட்டிங் செய்வோம் என்று வந்தது. மேலும் துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேராவை ரன் இல்லாமல் இழந்தது.

- Advertisement -

ஆனாலும் இலங்கை ஒரு முடிவோடு இருந்தது. எனவே களமிறங்கிய முன்வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் தைரியமாக பாகிஸ்தான் அணியின் எல்லா பந்துவீச்சாளர்களையும் சிதறடிக்க ஆரம்பித்தார்கள்.

இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் மற்றும் சதிர சமரவிக்ரமா இருவரும் அதிரடி சதம் அடிக்க 50 ஓவர்களில் இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான அணி இமாம் மற்றும் பாபர் இருவரது விக்கெட்டையும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இழந்துவிட்டது.

இந்த நிலையில் உலகக் கோப்பையில் முதல் போட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இலங்கைக்கு சதம் அடித்து பதிலடி கொடுத்து தங்கள் அணியை வெல்ல வைத்தார்கள். மேலும் உலக கோப்பையில் சேஸ் செய்யப்பட்ட அதிக ரன் என்கின்ற வகையில் உலக சாதனையும் படைக்க வைத்தார்கள். இந்த போட்டியின் போது அடிக்கடி இடுப்பு மற்றும் கால் பகுதியில் முகமது ரிஸ்வானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது.

போட்டியின் முடிவுக்கு பின்னால் பேசிய முகமது ரிஸ்வான் “நாட்டுக்காக விளையாடும் எல்லா நேரமும் பெருமையான தருணங்கள். இது மிகவும் கடினமாக இருந்தது. விஷயம் என்னவென்றால் பந்து வீச்சுக்கு பிறகு திரும்பி சென்ற நாங்கள், இந்த இலக்கை இன்னிங்சை பிரித்து அடிக்க திட்டமிட்டோம்.

ஆனால் அவர்கள் முன்கூட்டியே பாபர் விக்கெட்டை பெற்று விட்டார்கள். நான் ஷபிக் இடம் படிப்படியாகக் கொண்டு செல்லலாம் என்று கூறினேன். அதன் பிறகு எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. சில நேரங்களில் தசைப் பிடிப்பு இருந்தது சில நேரங்களில் நடித்தேன்!” என்று கூறிவிட்டு சிரித்தபடி முடித்துக் கொண்டார்!

- Advertisement -