இந்த வீரர்கள் மீண்டும் சென்னை அணியில் இடம் பெற வேண்டும் – இங்கிலாந்து வீரர் மொயின் அலி விருப்பம்

0
17003
Moeen Ali CSK

2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் மொயின் அலி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. பின்னர் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலமாக அவர் கைப்பற்றப்பட்டார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அதிரடியை காட்டினார்.

கடந்த ஆண்டு 15 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 357 ரன்கள் குவித்தார். கடந்த ஆண்டில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137.31 ஆக இருந்தது. அதே சமயம் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஆண்டில் இவருடைய பௌலிங் எக்கானமி 6.36 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஆண்டு சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய இறுதிப் போட்டியில் 20 பந்துகளில் அதிரடியாக 37 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடி காரணமாக சென்னை அணியின் ஸ்கோர் சட்டென உயரியது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணம்

கடந்த ஆண்டு சென்னை அணி நிர்வாகம் இவரை கைப்பற்றிய தருணத்தை பற்றி தற்பொழுது கூறியுள்ளார். சென்னை அணி என்னைக் கைப்பற்றிய வேளையில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னிடம் இன்டர்நெட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பு இரண்டும் இல்லாமல் இருந்தது. திடீரென எனது நண்பர் வீடியோ கால் செய்து சென்னை அணி மூலமாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயத்தைக் கூறினார்.

உடனடியாக அடுத்த நொடியே அனைத்து நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நான் எனது தந்தை மற்றும் சகோதரரிடம் இந்த சந்தோஷமான தருணத்தை பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும், அது கடந்த ஆண்டு நிறைவேறியதாக அவர் தற்பொழுது கூறியுள்ளார்.

- Advertisement -

அதேபோல இந்த ஆண்டு சென்னை அணியில் தான் மீண்டும் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை அணி நிர்வாகம் இந்த ஆண்டும் என்னை தக்க வைத்தது, தனக்கு பெருமையான உணர்வை கொடுத்தது என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் தலை சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்களை கொண்ட அணி சென்னை அணி என்றும், அந்த அணியில் மீண்டும் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க தான் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் இந்த வீரர்கள் சென்னை அணியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும்

பழைய சென்னை அணியில் இருந்து எந்தெந்த வீரர்கள் மீண்டும் இந்த ஆண்டு இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி முன் எடுத்து வைக்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர் “ஃபேப் டு பிளேசிஸ்,தீபக் சஹர்,அம்பத்தி ராயுடு, ஷர்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர் ஆகியோர் மீண்டும் சென்னை அணியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும்.

- Advertisement -

இவர்கள் அனைவரும் களத்தில் மிக சிறப்பாக பங்களிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்றும், கடந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்த ஆண்டு மீண்டும் இடம்பெற்றால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்”என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கூடிய விரைவில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை ரசிகர்கள் மத்தியில், அவர்களது கரகோஷம் மற்றும் ஆரவாரத்துடன் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்னும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.