பினிஷிங் பத்தி மாஹி பாய் கிட்ட கேட்டப்போ, இதுவரை யாருமே சொல்லாத அட்வைஸ் சொன்னார்; மறக்கவே மாட்டேன் – ரிங்கு சிங் பேட்டி!

0
10815

பெஸ்ட் ஃபினிஷர் மாஹி பாய்-இடம் நான் பினிஷிங் பற்றி கேட்டபோது அவர் கூறிய அட்வைஸ் என்னால் மறக்கவே முடியாது என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ரிங்கு சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த சீசனில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்து வருபவர் பினிஷிங் ரோலில் விளையாடும் ரிங்கு சிங். வரிசையாக தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்து வந்த கொல்கத்தா அணி, அதன் பின்னர் வெற்றி பாதைக்கு திரும்பி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று இப்போது 11 போட்டிகளில் 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பும் இருக்கிறது. கடந்த காலங்களில் கொல்கத்தா அணிக்கு பினிஷிங் ரோலில் விளையாடி வந்த ஆண்ட்ரே ரசல் இந்த சீசனில் தொடர்ச்சியாக சொதப்பி வந்தபோதும், பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் நன்றாக ஃபினிஷ் செய்ய முடிந்ததற்கு காரணம் ரிங்கு சிங்.

இவர் குஜராத் அணிக்கு எதிராக 5 சிக்ஸர்களை கடைசி ஓவரில் அடித்து வெற்றி பெற்று கொடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியில் பௌண்டரி அடித்து வெற்றி பெற்று கொடுத்தார். அதுபோன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தடுமாறி வந்தபோது களமிறங்கி 46 ரன்களை முக்கியமான கட்டத்தில் அடித்து நல்ல ஸ்கொரை எட்டுவதற்கு உதவினார். இப்படி கீழ் வரிசையில் கொல்கத்தா அணியின் தூணாக திகழ்ந்து வரும் ரிங்கு சிங், இந்திய அணிக்கு அடுத்த பினிஷர் ஆக வருவார் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த பினிஷராக உருவெடுத்து வரும் ரிங்கு சிங், கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஃபினிஷர் ஆக இருந்து வரும் மகேந்திர சிங் தோனியிடம் பேசியபோது அவர் சில அட்வைஸ் கொடுத்ததாகவும் அதை இதற்கு முன்னர் எவரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. இனி என் வாழ்வில் மறக்கவே முடியாது என்றும் பேசியுள்ளார் ரிங்கு சிங். பேசியதாவது:

- Advertisement -

“கிரிக்கெட்டில் பெஸ்ட் ஃபினிஷர் என்றால் அது மாஹி பாய் மட்டுமே. அவரைப் பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். இப்போது நான் பினிஷிங் ரோலில் விளையாடி வருவதால் நான் என்ன செய்ய வேண்டும் இன்று அவரிடம் கேட்டேன். அப்போது, ‘உனது திட்டத்தை மிகவும் எளிமையாக வைத்துக்கொள். எந்த பந்தை வீசவேண்டும் என்பதை பவுலர் பார்த்துக் கொள்வார். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே! பந்து எப்படி வருகிறது என்பதில் முழு கவனம் செலுத்தி எதிர்கொள். உனக்கு எந்த பக்கம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அதை செய். பல நேரங்களில் எடுபடும். சில நேரங்களில் தவறும் அதைப்பற்றி கவலைப்படாதே. அடுத்த போட்டியை பற்றி யோசிக்க சென்றுவிடு” என்றார்.

வழக்கமாக பலரும் கூறுவது, பவுலர் பந்தை எப்படி பிடித்திருக்கிறார் என்பதை நன்றாக பார்! குறிப்பிட்ட பவுலர் எத்தனை பந்துக்கு ஒருமுறை ஸ்லோ பந்து வீசுகிறார், வேகமான பந்து வீசுகிறார் என்று கவனி! என்று பல விதமாக கூறுவார்கள். ஆனால் மகேந்திர சிங் தோனி எனக்கு கூறிய அட்வைஸ் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. நான் இதுவரை கேட்காதவாறு இருந்தது. தனித்துவமானவராக இருக்கிறார். அதனால்தான் பெஸ்ட் பினிஷராக இருக்கிறார்.” என்றார்.