இளம் ஆப்கானிஸ்தான் வீரர்களின் செய்திகள் மற்றும் வீடியோக்கள் எனக்கு வருகின்றன; முஜீப் ஜாகீர் கியாஸ் ஆகியோருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை – ஆட்டநாயகன் ரஷீத் கான்!

0
499
Rashid

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பந்து வீசிய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஷித் கான் நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார்.

ரஷீத் கானுடன் இணைந்து பந்து வீசிய மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் இளம் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது மூன்று ஓவர்களில் 25 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர், லோயர் மிடில் ஆர்டர், ஃபினிஷிங் ஆர்டர் என மொத்தத்தையும் காலி செய்து விட்டார்கள். இதுவே ராஜஸ்தான் அணி 118 ரண்களில் சுருள முக்கியக் காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பெற்ற குஜராத் அணியின் ரஷீத் கான் பேசும்பொழுது “வித்தியாசமாக ஒன்றுமில்லை. சிக்னல் கொடுக்காமல் பேஸ்மேனுக்கு எதிராக சரியாக செயல்படுத்துவதுதான் இது. இது எனக்கு என்னுடைய லைன் மற்றும் லென்த். நான் இதை எளிமையாக வைத்திருக்கிறேன்.

கடந்த ஆட்டம் எனக்கு மிகவும் ஒரு மோசமான நாள். நான் சில மோசமான பந்துகளை வீசினேன். அவை தண்டிக்கப்பட்டன. நான் திரும்பி சென்று வீடியோ ஆய்வாளரிடம் பேசினேன். நான் கொஞ்சம் ஃபுல் லென்ந்த்தில் எடுத்து இருந்தேன்.

நான் மற்றும் நூர் இருவரும் பஷ்டூன் மொழி பேசுகிறோம். இது எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மிக எளிதாக இருக்கிறது. அவர் நிறைய உழைக்கிறார் அதிலிருந்து என்னிடம் கேள்விகள் கேட்கிறார். அதுவே அவரது வெற்றிக்கு காரணம்.

ஆப்கானிஸ்தான் இளம் வீரர்கள் குறித்து செய்திகளும் வீடியோக்களும் எனக்கு வருகின்றன. முஜீப், ஜாகீர் மற்றும் கியாஸ் ஆகியோர்களுக்கு துரதிஷ்டவசமாக இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை!” என்று கூறி இருக்கிறார்!