நான் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் கோபப்படுவேன் ; சாஹல் ரிக்கி பாண்டிங் செய்ததை மறக்கவே முடியாது- குல்தீப் யாதவ்!

0
313
Kuldeep

இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் மற்றும் சாகல் ஜோடி மிகவும் வெற்றிகரமான மணிக்கட்டு சுழற்பந்து வீச்சு ஜோடியாக இருந்தது.

பின்பு இருவரது பந்துவீச்சிலும் சற்று தொய்வு ஏற்பட பேட்ஸ்மேன்கள் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். இதிலிருந்து சாகல் தன்னைத் தற்காத்துக் கொள்ள மோசமாகப் பாதிக்கப்பட்டார் குல்தீப் யாதவ்!

- Advertisement -

இவர் மீண்டும் இந்திய அணிக்குள் திரும்ப வருவதற்கான வாய்ப்பு ஐபிஎல் தொடரில் செயல்படுவதை பொறுத்துதான் இருந்தது.

இந்த நிலையில் 2018 கொல்கத்தா அணியால் 5.80 கோடிக்கு வாங்கப்பட்ட இவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியான வாய்ப்புகள் அணியில் கிடைக்கவில்லை.

கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை வெறுமனே பெஞ்சில் உட்கார வைத்து தேய்த்தது. வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இருவரும் கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சு ஜோடியாக மாறினார்கள். இதனால் இவரது ஐபிஎல் வாழ்க்கை மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் கேள்விக்குறியானது. கொல்கத்தா அணி நிர்வாகத்தின் மீது இப்பொழுது வரை குல்திப் யாதவுக்கு பெரிய விமர்சனம் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இரண்டு கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரை வாங்கியது. அதற்குப் பிறகு இவரது செயல்பாடு மிகச் சிறப்பாக ஐபிஎல் தொடரில் அமைந்தது. மேலும் இந்திய அணிக்கும் திரும்ப வந்தார்.

தற்பொழுது தனது கடினமான காலகட்டம் குறித்து பேசி உள்ள குல்தீப் யாதவ் “நான் வீழ்ந்திருக்கும் போதெல்லாம் இந்திய அணியில் இருந்த சாகல் இடம் நிறைய பேசுவேன். காயம் மற்றும் அறுவை சிகிச்சை நடந்த காலங்களில் என் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

அப்பொழுது நான் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் கோபப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சாகல் எனக்கு உறுதுணையாக இருந்து எப்பொழுதும் அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார். மறுவாழ்வில் கவனம் செலுத்துங்கள் அதுதான் உங்களை மீட்டுக் கொண்டு வரும் என்று அவர் கூறியது நான் திரும்ப வர பெரிய உதவியாக இருந்தது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணி என்னை வாங்கிய பொழுது ரிக்கி பாண்டிங் என்னை தொடர்பு கொண்டது இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. அவர் என்னிடம் 14 ஆட்டங்களிலும் நீங்கள் விளையாடுவீர்கள் என்று கூறினார்.

அது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. நான் செட்டில் ஆகிவிட்டேன். நான் ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தி இருக்கிறேனா இல்லையா என்று அவர் கவலைப்படுவது கிடையாது. ஒரு பந்துவீச்சாளராக நான் அடி வாங்கக் கூடிய இடங்கள் பற்றி மட்டுமே அவர் எனக்கு அறிவுரை வழங்குவார்!” என்று கூறியிருக்கிறார்!