இங்கு வந்ததிலிருந்து சிறப்பாக உணர்கிறேன் – போட்டிக்குப் பின் மேக்ஸ்வெல் கூறியது

0
211
Glenn Maxwell

நேற்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். லீவிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். பதினோரு ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது ராஜஸ்தான் அணி. ஆனால் அதன் பிறகு வந்த ஓவர்களில் பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால் ராஜஸ்தான் அணிகள் அடுத்த 9 ஓவர்களில் 49 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக சஹால், நதீம் மற்றும் ஹர்சல் சிறப்பாக வீசினர்.

அதன் பிறகு பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியது. படிக்கல் மற்றும் கோலி வேகமாக ஆட்டமிழந்தாலும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த பரத் மற்றும் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை பெங்களூரு பக்கம் எடுத்துச் சென்றனர். இருவரும் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணிக்கு இரண்டு புள்ளிகளைப் பெற்று தந்தனர். இதுகுறித்து பெங்களூர் வீரர் மேக்ஸ்வெல் பேசும்போது ஆர்சிபி அணியில் இணைந்த பிறகு தான் சிறப்பாக உணர்வதாக கூறினார். விளையாடும் போதும் சரி பயிற்சி எடுக்கும் போதும் சரி சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள எளிதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வல் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் இதன் பிறகும் பெங்களூரு அணி இவருக்கு 14.25 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது. அதற்கு சரிசெய்யும் விதமாக தற்போது நான்கு அரை சதங்களுடன் 350 ரன்களுக்கு மேல் பெங்களூர் அணிக்காக குவித்து விட்டார் மேக்ஸ்வெல். மேலும் தற்போது பெங்களூரு அணி ஒருவரை நம்பியே மட்டுமில்லாமல் அனைத்து வீரர்களும் தங்களால் இயன்ற அளவு அணிக்கு பங்களிக்கிறார்கள் என்றும் மேக்ஸ்வெல் கூறினார்.

நேற்று மேக்ஸ்வெல்லுடன் இணைந்து சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் கே எஸ் பரத். ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஆன இவர் நேற்று பெங்களூர் அணிக்காக 44 ரன்கள் குவித்தார். இது பட்டு மேக்ஸ்வெல் பேசும் பொழுது இவை மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்றும் இவரை மூன்றாம் நிலை வீரராக இறக்கியது சோதனை முயற்சி எல்லாம் எதுவும் இல்லை என்றும் கூறினார். மேலும் 200 போகவேண்டிய ஸ்கோரை கடைசி நேரத்தில் கட்டுப்படுத்தி 150 ரன்களுக்குள் நிறுத்தியது மிகப்பெரிய விஷயம் என்றும் மேக்ஸ்வெல் கூறினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.