“எங்க பிளேயர்ஸ் யார் மேலயும் பழி போட முடியாது தோல்விக்கு காரணம் வேற” – எம்எஸ் தோனி!

0
2233

16ஆவது ஐபிஎல் சீசனில் 61 வது போட்டியில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின . சிஎஸ்கே அணி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் இருந்தது .

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது . சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க தடுமாறினர் . 20 ஓவர்களின் முடிவில் ஆரம்பிக்க நிலப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சிஎஸ்கே .

- Advertisement -

அந்த அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 48 ரன்கள் உடன் ஆட்டம் விளக்காமல் இருந்தார் . கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் வரும் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மூர்த்தி 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் 6 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் நிதிஷ் ரானா மற்றும் ரிங் கோ சிங் ஆகியோரின் அபார் ஆட்டத்தால் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் அந்த அணி ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது . சிறப்பாக ஆடிய நித்திஷ் ரானா 57 ரன்கள் உடன் ஆட்டம் விளக்காமல் இருந்தார் . இன்போசிங் 54 ரன்கள் ஆட்டம் இழந்தார் . சென்னை அணியின் பந்துவீச்சில் தீபக்சகார் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் எம் எஸ் தோனி ” நாங்கள் பந்து வீசும் போது முதல் பந்திலேயே தெரிந்து கொண்டேன் குறைந்தது 180 ரன்கள் ஆவது அடித்திருக்க வேண்டும் . நாங்கள் ஆடி இருக்கும்போது அதற்கு வாய்ப்பே இல்லை . பணியின் தாக்கம் ஆடுகளத்தின் தன்மையை முழுவதுமாக மாற்றி விட்டது . கிரிக்கெட்டில் தட்பவெப்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எங்கள் அணியின் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் குறை சொல்ல முடியாது . சிவம் டு வே ஆடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . அவரிடம் பிடித்த முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் எவ்வளவுதான் நன்றாக ஆடினாலும் தன்னுடைய ஆட்டத்தில் அவருக்கு திருப்தி இல்லை மேலும் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். தீபக்சஹார் துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசினார் . அவரால் இரண்டு பக்கமும் பந்துகளை ஸ்விங் செய்ய முடிகிறது . தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் களத்தடுப்புக்கு ஏற்ப பந்து வீசவும் தன்னை முன்னேற்றி இருக்கிறார் “எனக் கூறினார்