தோனி மாதிரி இனி யாருமே 3 ஐசிசி கப் ஜெயிக்க மாட்டாங்க – வாய் வைத்த கம்பீர்!

0
7429

தோனி போல இனி யாரும் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வெல்ல மாட்டார்கள் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, துரதிஷ்டவசமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி பரிதாபமாக உலக கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா மீதும், துணை கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பிலும், மேலும் டி20ல் ஓய்வும் அறிவிக்க வேண்டும் என்று வேறு சில கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் இவருக்கு கடைசி உலக கோப்பையா? என்கிற அளவிற்கு பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனாக தோனி இருக்கிறார். அவருக்கு பிறகு வேறு யாரும் ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்திய அணிக்காக பெற்று தரவில்லை என்ற சோகம் தற்போது வரை நிலவுகிறது.

- Advertisement -

இதன் அடிப்படையில் இனி எவரும் தோனி போன்று மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு பெற்று தர மாட்டார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் கூறுகையில்,

“இந்திய அணிக்காக மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் பெற்று தந்த ஒரே கேப்டன் தோனி. இன்றியமையாத பல சாதனைகளை அவர் செய்துவிட்டு இனிவரும் கேப்டன்களுக்கு விட்டுச் சென்று இருக்கிறார். ஆனால் தற்போது இந்திய அணி பலம் பொருந்தியதாக இருந்தாலும் ஒரு ஐசிசி கோப்பையை வெல்வதற்கே போராடுகிறது.

இதைவைத்துப் பார்க்கையில், தோனி போன்று இனிவரும் எந்த ஒரு கேப்டனும் 3 ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்றுத் தரப் போவதில்லை. இந்த சாதனை இறுதிவரை முறியடிக்க முடியாமல் தான் இருக்கப் போகிறது.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.