” மேத்யூஸ் பிரச்சனையில் எனக்கு உடன்பாடு இல்லை!” – பங்களாதேஷ் கோச் டொனால்ட் பரபரப்பான பேச்சு!

0
4568
Mathews

உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் உலகக் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஆட்டமிழக்காத முறையில் டைம் அவுட் என்கின்ற வகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை மேத்யூஸ் ஆட்டம் இழந்து சென்றார்!

ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்ததும் களத்திற்கு வரக்கூடிய பேட்ஸ்மேன் இரண்டு நிமிடங்களில் தயாராகி முதல் பந்தை சந்திக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இதற்கு முன்பு மூன்று நிமிடங்களாக இருந்தது உலக கோப்பைக்கு முன்பாக இரண்டு நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் உள்ளே வந்த மேத்யூஸ் கடைசி நேரத்தில் ஹெல்மெட்டை சரி செய்யும் பொழுது அதன் உள்பட்டை அறுந்து இருப்பதை கண்டார். அதுவும் அப்பொழுதுதான் அறுந்தது. இதன் காரணமாக அவர் மறு ஹெல்மெட்டை கேட்டார்.

ஆனால் அந்த நேரத்தில் அவர் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விட்டதாக பங்களாதேஷ் கேப்டன் முறையிட நடுவர்கள் அவுட் கொடுத்து விட்டார்கள். ஆனால் மேத்யூஸ் வீடியோ ஆதாரத்தைக் காட்டி மீதி 5 நொடிகள் இருந்ததை நிரூபித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விஷயம் இப்பொழுது வரை பரபரப்பாகவே இருக்கிறது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உலகின் தலைசிறந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் இருந்து வருகிறார். அவரிடம் இந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டதற்கு அவர் உன் மனம் திறந்து பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இது நடந்து கொண்டிருந்த பொழுது உடனடியாக என் உள்ளுணர்வு சொன்னது, களத்திற்குள் சென்று ‘போதும் போதும் நிறுத்துங்கள். நாங்கள் இதற்காக விளையாடுகின்ற அந்த வகையான குழு கிடையாது’ என்று சொல்லக்கூடிய எண்ணம்தான் இருந்தது.

ஆனால் அங்கு விஷயங்கள் மிக விரைவாக நடந்து முடிந்து விட்டன. மேலும் எனக்கு அதை தடுக்கின்ற அதிகாரம் கிடையாது. ஏனென்றால் நான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிடையாது.

நான் களத்தை பார்த்த பொழுது அங்கு நடுவர் எராஸ்மஸ் மேத்யூசை களத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். மேத்யூஸ் அங்கிருந்து வெளியேறி கோபமாக ஹெல்மெட்டை கீழே எறிந்து விட்டு சென்றார். இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!