என்னால் செய்ய முடிந்தது
சூரியகுமாருக்குத் தலை வணங்குவதுதான்; மும்பை அணியில் அவர்தான் பெரிய வீரர் – ஹர்பஜன் சிங் பாராட்டு!|

0
172
Harbhajan

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் 49 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்!

இந்தப் போட்டியில் மும்பை பேட்டிங் செய்யும்பொழுது சரியான இடைவேளையில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால் சூரியகுமார் யாதவால் தனது வழக்கமான அதிரடிக்குள் ஆரம்பத்தில் போக முடியவில்லை.

- Advertisement -

32 பந்துகளில் அரை சதத்தை எடுத்தார். கடைசி மூன்று ஓவர்களில் 15 பந்துகளை எடுத்துக் கொண்டு 51 ரன்களை விளாசி தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.

அவரது இந்த அதிரடியால் மும்பை ஆட்டத்தை வென்று 14 புள்ளிகள் உடன் மீண்டும் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சூரியகுமார் ஆட்டம் பற்றி ஹர்பஜன்சிங் பேசுகையில் ” அவர் உடல் தகுதியுடன் இருப்பார், தொடர்ந்து மும்பை அணிக்கு விளையாடி வெற்றிகளைப் பெறுவார் என்று நான் நம்புகிறேன். அவர் பேட்டிங் செய்ய வரும் பொழுது அனைவரும் அவரது பெயரை உச்சரிக்கிறார்கள்.

- Advertisement -

முன்பு சச்சின் சச்சின், பிறகு மலிங்கா மலிங்கா என்று இருந்தது தற்பொழுது சூர்யா சூர்யா என்று மாறியிருக்கிறது. இந்த மும்பை அணியில் சூர்யாவை விட பெரிய வீரர்கள் யாரும் கிடையாது.

சூரியகுமார் வித்தியாசமான பேட்டிங் அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார். அவரிடம் நிறைய ஷாட்கள் இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் அவரது விக்கெட்டை வீழ்த்துவதை மறந்துவிட வேண்டியதுதான். அவருக்கு டாட்-பால் வீசினாலே பெரிய சாதனைதான்.

என்னால் செய்ய முடிவது சூர்யாவுக்குத் தலைவணங்குவதுதான். அவர் இந்த மும்பை அணியைத் தனி ஒருவனாக சுமந்து செல்கிறார். இன்னும் சிலரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர் ஆனால் இவர் வேறு லெவலில் இருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!