இந்த இந்தியா வீரரை பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன் – வெங்கடேஷ் ஐயர்

0
1001
Venkatesh Iyer

ஐபிஎல் தொடர் தற்போது அமீரக நாட்டில் உள்ள மூன்று முக்கிய மைதானங்களில் நடந்து வருகிறது. முதல் இரண்டு இடங்களை சென்னை மற்றும் டெல்லி அணிகள் உறுதி செய்துவிட்டன. மூன்றாம் இடத்தைப் பிடிப்பதில் பெங்களூரு அணி அதிக ஆர்வம் காட்டி வருகிறது. நான்காவது இடத்துக்கான போட்டியில் தற்போதுவரை மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் என நான்கு அணிகள் உள்ளன. ரன்ரேட் அடிப்படையில் பார்த்தால் கொல்கத்தா அணி தான் நிச்சயம் நான்காவது இடத்தை பிடிக்கும் என்பது போல் உள்ளது.

கொல்கத்தா அணி முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடியது. ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்ததிலிருந்து அந்த அணியின் வெற்றி கணக்கு அதிகமாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணி விளையாடும் அதிரடியான பேட்டிங் முறைதான். முதல் பகுதியில் மெல்ல மெல்ல ரன்கள் சேர்த்த அந்த அணி தற்போது பவர்பிளேயே நன்கு பயன்படுத்தி அதிகமாக ரன்கள் எடுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணிக்கு புதிதாக அறிமுகமான துவக்க வீரரான வெங்கடேஷ். தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டிலும் எதிர் அணியின் வெற்றி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. பயமற்று இவர் தைரியமாக விளையாடும் முறை மிகப் பெரிய போர்களுக்கு சிலநேரம் கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மத்திய பிரதேசத்தில் பிறந்த இவர் படிப்பிலும் மிகமிக சிறப்பானவர். சி.எ படிப்பை விட்டுவிட்டு கிரிக்கெட்டுக்கு வந்த இவர் தற்போது ஒவ்வொரு அணிக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். மேலும் ஒருவேளை கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நான் தற்போது ஐஐடியில் படித்துக் கொண்டு இருந்து இருப்பேன் என்றும் கூறுகிறார்.

ஆரம்பத்தில் வலதுகை பேட்டிங் வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கியவர் தற்போது இடது கை பேட்டிங் வீரராக மாறியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணமும் பலருக்கு வியப்பை தருகிறது. தான் ஆரம்பத்தில் வலதுகை பேட்டை வீரராக தான் ஆரம்பித்தேன் என்றும் அதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மட்டும் துவக்க வீரர் சவுரவ் கங்குலியை பார்த்துதான் இடது கை பேட்டிங் வீரராக மாறினேன் என்றும் கூறியுள்ளார்.

அதிரடி பேட்டிங் உடன் இணைந்து மிதமான வேகப்பந்து வீச்சையும் வெளிப்படுத்தும் இவர் இந்திய அணிக்கு அடுத்த சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்படுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.