என்னால் ஃபீல்டிங்கை மட்டும்தான் அமைக்க முடியும் ; பவுலர்கள்தான் தெளிவா இருக்கனும்; ஹர்திக் பாண்டியா விரக்தி!

0
1336
Hardikpandya

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி முக்கியமான ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடி போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள் குவிக்க எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களுக்கு 218 ரன்கள் வந்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதை அடுத்து மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

தோல்விக்குப்பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
“ரஷித் கான் மட்டுமே இன்றைய போட்டியில் எங்கள் அணியில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இந்த முடிவுக்காக நாங்கள் எதையும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டியது கிடையாது.

- Advertisement -

நாங்கள் இன்றைய போட்டியில் ஒரு குழுவாக இல்லை. பந்துவீச்சிலும் தட்டையாகவே செயல்பட்டோம். தெளிவான திட்டங்கள் இல்லை அல்லது இருந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தவில்லை.

விக்கெட் பேட்டிங் செய்ய வசதியாக மிகவும் தட்டையாக இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு 25 ரன்கள் கூடுதலாக கொடுத்ததாக உணர்ந்தேன்.

சூரியகுமார் பற்றி நான் நிறைய பேசியிருக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். உங்கள் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.

என்னைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் ஒரு தெளிவுடன் இருக்க வேண்டும். கேப்டனாக நான் அவர்களுக்கு ஃபீல்டைதான் அமைத்துக் கொடுக்க முடியும்.

கடைசிப் பத்து ஓவர்களில் அவர்கள் 5 விக்கெட் இழந்தும் நாங்கள் 129 ரன்களை கொடுத்தது ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய விலையாக அமைந்து விட்டது. தீவிரமும் தட்டையாகவே இருந்தது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும், ஆனால் இந்த மட்டத்தில் இப்படி செயல்பட்டால் அது நடக்காது!” என்று கூறி இருக்கிறார்!