இந்த ஒரு விஷயத்தில் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும், உண்மையை வெளியிட்ட எம்எஸ் தோனி

0
503
MS Dhoni and Dwayne Bravo

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடைபெற்ற ஆட்டம் மிக சுவாரசியமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக படிக்கல் 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 70 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக விளையாடிய விராட் கோலி 41 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரி என 53 ரன்கள் குவித்தார். சென்னை அணியில் டுவைன் பிராவோ மிக அற்புதமாக பந்துவீசி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே சற்று நிதானமாக விளையாடிய காரணத்தினால், 19வது ஓவரின் முதல் பந்தில் பெங்களூரு அணி நிர்ணயித்த இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் வீரர்கள் ருத்ராஜ் 38 ரன்களும், டு பிளசிஸ் 31 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் ராயுடு 32 ரன்களும் மற்றும் மொயின்அலி 23 ரன்களும் குவித்தனர். இறுதியில் தோனி 11 ரன்களில் மற்றும் சுரேஷ் ரெய்னா 17 ரன்களில் ஆட்டம் இழக்காமல் வெற்றி ரன்களை அடித்து சென்னை அணியை வெற்றிபெற வைத்தனர்.

- Advertisement -

பிராவோ குறித்து மகேந்திர சிங் தோனி கூறிய ரகசியம்

போட்டி முடிந்ததும் பேசிய மகேந்திர சிங் தோனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று மைதானங்களில் தற்போது உள்ளன. மூன்று மைதானங்களில் இந்த மைதானம் (ஷார்ஜா) மெதுவான ஆட்டத்தை கொண்ட தன்மை உடையது. பெங்களூர் அணி முதல் 8 ஓவர்களில் மிக அற்புதமாக விளையாடினர். இடைவேளைக்குப் பின்னர் ஜடேஜா மிக அற்புதமாக பந்து வீசினார். மைதானம் மெதுவான ஆட்டத்திற்கு துணை போக ஆரம்பித்த நிலையில், பிராவோவை சற்று முன்னரே பந்து வீச வைக்க நினைத்தேன்.

அவரும் மிக அற்புதமாக பந்துவீசி அவரது 4 ஓவர்களில் பெங்களூரு அணி வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். பிராவோ என்னுடைய சகோதரர், எங்கள் இருவருக்கும் அடிக்கடி ஒரு விஷயத்தில் சண்டை வரும். ஸ்லோவர் பந்துகளை வீசும் விஷயத்தில் எனக்கும் பிராவோவுக்கும் எப்போழுதும் அடிக்கடி சண்டை வரும் என்று எம்எஸ் தோனி நேற்று கூறினார்.

மேலும் பேசிய அவர், தற்பொழுது அனைவருக்கும் பிராவோ ஸ்லோவர் பந்துகளை தான் வீசுவார் என்று தெரிந்துவிட்டது. எனவே நான் அவரிடம் இனி ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் ஒரே மாதிரிbஸ்லோவராக வீசாமல், வெவ்வேறு விதமான 6 பந்துகளை வீசுமாறு அறிவுரை கூறியுள்ளேன் என்றும் எம் எஸ் தோனி கூறினார்.

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளி பட்டியல் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி, தொடர்ச்சியாக சந்திக்கும் மூன்றாவது தோல்வி இதுவாகும். பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.