சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இவரது ஆட்டத்தை காண்பதற்கு மிக ஆர்வமாக இருக்கிறேன் – சுனில் கவாஸ்கர்

0
332

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணியில் பந்து வீச்சு மிக சுமாராக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர் உம்ரான் மாலிக் விளையாடுவதை காண ஆர்வமாக இருப்பதாகவும் தன்னுடைய ஆசையை தற்பொழுது தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அவரது ஆட்டத்தை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்

- Advertisement -

ஒரு சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைக் கண்டு அதன் பின்னர் வரும் அவர் விளையாடுவதை காண ஒவ்வொரு முறையும் நான் ஆர்வமாக காத்திருப்பேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக தற்போது இவரது ( உம்ரான் மாலிக் ) ஆட்டத்தை காண நான் மிக ஆர்வமாக இருக்கிறேன் என்று என்னுடைய தனது ஆசையை நம்மிடம் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராக இருக்கிறது

நடந்து முடிந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் சஹால் தவிர விக்கெட் டேக்கிங் பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. குறிப்பாக புவனேஷ்வர் குமாரை தவிர்த்து வேறு யார் சிறப்பாக பந்து வீசியது என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதன் காரணமாகத்தான் 200 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியால் முதல் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.

- Advertisement -

மூன்றாவது போட்டியில் உம்ரான் மாலிக் விளையாட வாய்ப்பு இருக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதைதான் எதிர்நோக்கும். எனவே அதிரடி மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை மாற்றம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மைதானத்திற்கு தகுந்தவாறு உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங் விளையாட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அக்டோபர் மாதம் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கின்றது. எனவே இந்திய அணி தற்பொழுது உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் ஏதேனும் ஒரு கட்டத்தில் விளையாட்டு அவர்களது திறனை சரிபார்க்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.