“சச்சினுக்கு நான் நண்பன்.. ஆனா கோலிக்கு?.. எல்லாம் பொறாமைதான்!” – லாரா அதிரடி பேச்சு!

0
620
Virat

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து, தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக விருதை வென்றார் விராட் கோலி.

இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி ஒரு முனையில் நின்று இறுதிவரை ஆட வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டது. அவர் எப்பொழுது அடித்து விளையாட வேண்டும் என்று கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் கேட்டுவிட்டுதான் விளையாடினார்.

- Advertisement -

ஒரு பெரிய தொடரை சந்திக்கும் பொழுது ஒவ்வொரு வீரருக்கும் சரியான ரோல் கொடுப்பது அவசியம். இந்த முறை இந்திய அணியில் எல்லோருக்கும் அப்படியான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அதுபோலவே விராட் கோலிக்கும் நின்று விளையாட ரோல் கொடுக்கப்பட்டது. நேர்மையாக அவர் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சொன்னதைக் கேட்டு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்.

இந்த நிலையில்தான் சிலர் விராட் கோலி தன்னுடைய சாதனைகளுக்காக சுயநலமாக மெதுவாக விளையாடுகிறார் என்கின்ற கருத்துக்களை பரப்பி வந்தார்கள். அவர் சில இடங்களில் வேகமாக விளையாடி இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் கூறப்பட்டது.

வெளியில் இருந்து இப்படியான எதிர்மறை செய்திகள் பரப்பப்பட்டாலும் கூட அணி நிர்வாகம் என்ன செய்ததோ அதை தொடர்ந்து விராட் கோலி எந்த சந்தேகமும் தயக்கமும் இல்லாமல் செய்தே வந்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் அடித்த அதிகபட்ச சதங்களான 49 சதங்களைத் தாண்டி, ஐம்பதாவது சதத்தையும் அடித்து புதிய உச்சத்தை தொட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள பிரையன் லாரா “விராட் கோலி சுயநலமாக விளையாடுகிறார் என்று பேசக் கூடியவர்கள் எல்லாம், அவர் மீது பொறாமை கொண்டவர்கள். அவர் அடித்திருக்கும் ரன்களை கண்டு பொறாமைப் படுகிறார்கள். நான் விளையாடும் பொழுதும் இப்படியான விஷயங்களை சந்தித்து இருக்கிறேன்.

சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே நெருங்க முடியும். அவருடைய ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தீவிர ரசிகன். அவர் அனைத்தையும் கொடுத்துப் போட்டிக்கு தயாராகும் விதம் அபாரமானது. இப்படி இருக்கும் பொழுது நீங்கள் எப்படி அவருக்கு ரசிகராக இல்லாமல் இருக்க முடியும்.

எனது வாழ்த்துக்கள் எப்பொழுதும் விராட் கோலிக்கு உண்டு. அவர் சச்சின் போல நூறு சதங்கள் அடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனக்கு சச்சின் ஒரு அன்பான நண்பர். ஆனால் நான் முன்பு கூறியது போலவே விராட் கோலிக்கு நான் தீவிர ரசிகன்!” என்று கூறியிருக்கிறார்!