நான் முக்கியமான விரலில் இத்தனை தையலுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன் – ராகுல் சாஹர் வருத்தம்

0
78
Rahul Chahar PBKS

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 60வது போட்டியில் பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும், மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் மோதி வருகின்றன. இரண்டு அணிகளுக்குமே இது ப்ளேஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியாகும்.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் இந்திய லெக்-ஸ்பின்னர் ராகுல் சஹார் இடம் பெற்றிருக்கிறார். சென்னை அணியின் தீபக் சஹரின் சகோதர் உறவு முறைக்கொண்ட இவர், கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்திருந்தது. நடுவில் யு.ஏ.இ-ல் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையில் யுஸ்வேந்திர சாஹலுக்குப் பதிலாக இவர் இடம்பெற்று, சரியாகத் திறமையை நிரூபிக்க முடியாமல், இந்திய அணியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தத் தொடரில் முதல் ஒன்பது ஆட்டங்களில் சிறப்பாக பந்துவீசி 12 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். குஜராத் அணியுடனான பத்தாவது ஆட்டத்தில் நான்-ஸ்ட்ரைக்கர் என்ட்டில் இவர் ரன்-அவுட் ஆகும்பொழுது, கையில் அடிபட்டு, அதற்கு மேல் பந்துவீசவும் முடியாமல் போனது. அதற்கடுத்த போட்டியில் 22 பந்துகள் வீசி 39 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றாமல் இருந்தார்.

இதுக்குறித்து இன்று பெங்களூர் ஆட்டத்திற்கு முன்பாக பேசியிருந்த ராகுல் சஹர், அதில் “நான் தொடரின் ஆரம்பத்தில் நன்றாகவே தொடங்கினேன். நடுவிலும் நன்றாகவே சென்றது. கடைசி இரண்டு மூன்று போட்டிகள் நன்றாக அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், நான் என் கையில் தையலுடன் விளையாடினேன். அது என் முக்கிய விரல். இன்னும் தையல் பிரிக்கப்படவில்லை. வரவிருக்கும் போட்டிகளில் நான் ரன்கள் விட்டுத்தருவதில் கவனம் செலுத்த வேண்டும். விக்கெட்டுகள் நம் கையில் இல்லை. ஆனால் சிக்கனமாய் பந்து வீசுவது, நம் கையில்தான் இருக்கிறது” என்றார்.