இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் இசான் கிஷான் ஆட்டம் இழந்து வெளியேறிய விதம் பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்பை என்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஹைதராபாத் தோற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிடும்.
ஹைதராபாத்துக்கு விழுந்த அடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இது தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இசான் கிஷான் விளையாடுவதற்கு வந்தார்.
இந்த நிலையில் தீபக்சகர் பந்து வீச்சில் பின்பக்கமாக விளையாடுவதற்கு முயற்சி செய்ய பந்து கீப்பர் செல்ல அவர் அதை பிடித்தார். ஆனால் விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர் இருவருமே அவுட் கேட்கவில்லை. நடுவர் வைடு கொடுத்தார். இப்படியான நிலையில் இஷான் கிஷான் தானாக அவுட் என்பது போல வெளியேற ஆரம்பித்து விட்டார். இதைத் தொடர்ந்து நடுவர் அவுட் என அறிவித்தார்.
மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய அவுட்
இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அடுத்து ரீப்ளேவில் பார்க்கும் பொழுது அது அவுட் இல்லை என தெரியவந்தது. எல்லா பேட்ஸ்மேன்களும் அவுட் என தீர்ப்பு வந்தால் அதற்கு அப்பீல் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இசான் கிஷான் நடுவர் வைடு தந்த பந்துக்கு தானாக களத்தை விட்டு வெளியேறியது பெரிய சந்தேகங்களை உண்டு செய்திருக்கிறது.
இதையும் படிங்க :காஷ்மீர் சம்பவம் மன வேதனை அளிக்கிறது.. ஒட்டுமொத்த ஆஸி வீரர்களும் துணை நிற்போம்.. கம்மின்ஸ் பாண்டியா கருத்து
மேலும் இஷான் கிஷான் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுவர் வைடு கொடுத்த நிலையில், இஷான் கிஷான் தானாக களத்தை விட்டு வெளியேறியது, தன்னுடைய பழைய அணிக்காக அவர் வேண்டுமென்றே செய்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தற்போது இந்த விஷயம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய சந்தேகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது.






