நடப்பு ஐபிஎல் 17வது சீசனில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.
இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்த ஐதராபாத் அணிக்கு கேப்டன் கம்மின்ஸ்தான் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். அந்த அணி 18.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி மொத்தமாக 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தாவின் எல்லா பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக அரைசதம் அடிக்க, அந்த அணி வெறும் 10.3 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை வென்றது போலவே, ஐபிஎல் தொடரையும் கம்மின்ஸ் வென்று சாதனை படைப்பார் என பலரும் நம்பி இருந்தார்கள். அதை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி உடைத்து சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசி இருக்கும் ஹைதராபாத் கேப்டன் கம்மின் கூறும் பொழுது “கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பதிவுசினார்கள். என்னுடைய பழைய நண்பர் ஸ்டார்க் இன்று மீண்டும் திரும்ப வந்தார். இன்றுஎங்களுக்கு போதுமான நாளாக அமையவில்லை. அகமதாபாத்தில் நடந்தது போலவே இருந்தது. இது 200 ரன்கள் எடுப்பதற்கான ஆடுகளம் இல்லை. 160 ரன்கள் கூட எங்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்திருக்கும்.
இதையும் படிங்க : சேப்பாக்கம் 2012 அந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.. இதைவிட பெரிய பிறந்தநாள் பரிசு இருக்காது – சுனில் நரைன் பேட்டி
இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் பேட்டைக்கு மூன்று முறை 250 ரன்கள் தாண்டி எடுத்தது சிறப்பானது. நான் இந்த அணியில் பலருடன் ஏற்கனவே சேர்ந்து வேலை செய்தது கிடையாது. தற்போது இவர்களுடன் சேர்ந்து விளையாடியது சிறப்பாக இருந்தது. சிறந்த மற்றும் நல்ல அணி ஊழியர்களைக் கொண்டிருந்தோம். நாங்கள் இந்தியாவில் அதிக காலம் விளையாடுகிறோம். இதே இந்திய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது ஆதரவு கிடைக்காது. ஆனால் தற்பொழுது ஆதரவு கிடைப்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.