ஐபிஎல் 2025

ஆர்சிபி டேபிள் டாப் கனவை இப்படித்தான் முடிச்சோம்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் – கம்மின்ஸ் பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி முதல் இரண்டு இடங்களில் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்து இருக்கிறது. இந்த வெற்றி குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் வந்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு விளையாடலாம் என்கின்ற கனவுடன் ஆர்சிபி அணி களம் கண்டது. ஆனால் ஹைதராபாத் அணி எல்லா பக்கத்திலும் சிறப்பாக செயல்பட்டு ஆர்சிபி அணியை கடைசி சில ஓவர்களில் ஒட்டு மொத்தமாக வீழ்த்தி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இஷான் கிஷான் அபாரம்

இந்த போட்டியில் டாஸ் போட்டு முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் சிறப்பான முறையில் விளையாடிய 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 235 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 25 பந்தில் 43 ரன்கள், பில் சால்ட் 32 பந்தில் 62 ரன்கள் எடுத்தார்கள். நல்ல துவக்கம் கிடைக்கும் கடைசி கட்டத்தில் பினிஷர்கள் சரியாக விளையாடாத காரணத்தினால் 189 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தாமதமான வெற்றிதான்

இந்த போட்டி பற்றி பேசிய கம்மின்ஸ் கூறும்பொழுது ” இந்த சீசனில் நாங்கள் கொஞ்சம் தாமதமாக வெற்றிகள் பெற ஆரம்பித்திருக்கிறோம். ஆனாலும் இந்த போட்டியில் பேட்டிங் பௌலிங் என நாங்கள் எல்லா துறைகளிலும் அணியாக ஒன்றிணைந்து விளையாடி வெற்றி பெற்றிருக்கிறோம். நிதீஷ் குமார் வந்துடுச்சிக்கு திரும்பி வந்திருப்பது அவரை முழுமையான ஆறாவது பந்து வீச்சாளராக உணர வைக்கிறது. அபிஷேக் ஷர்மா எப்பொழுதும் பந்துவீச்சில் பயன்படுத்த சொல்லி கேட்பார். ஆனால் நிதீஷ் குமார் நன்றாக இருக்கிறார்”

இதையும் படிங்க : 235 ரன்.. பரிதாபமாக மும்பையிடம் சிக்கிய ஆர்சிபி.. தப்பித்த குஜராத்.. மாறிய புள்ளி பட்டியல் – முழு விபரம்

“இந்த ஆடுகளத்தை நாங்கள் தவறாக கணக்கிட்டு விட்டோம். 170 ரன்கள்தான் எடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் எங்களின் பேட்டர்கள் அனைவரும் ஆடுகளம் மிகவும் சிறப்பாக இருப்பதாக சொன்னார்கள். எனவே அனைவரும் அடித்து விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெரிய உயரம் இல்லாத இஷான் கிஷானின் பவர் பெரியதாக இருக்கிறது. மலிங்கா எந்த இடத்தில் பந்தை கொடுத்தாலும் சிறப்பாக வீசக் கூடியவராக இருக்கிறார். அவரிடம் நல்ல வேரியேஷன் இருக்கிறது. இந்த சீசனில் அவர் நல்ல கண்டுபிடிப்பு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts