235 ரன்.. பரிதாபமாக மும்பையிடம் சிக்கிய ஆர்சிபி.. தப்பித்த குஜராத்.. மாறிய புள்ளி பட்டியல் – முழு விபரம்

0
2122
RCB

இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி வென்றால் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருந்த காரணத்தினால் போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஹைதராபாத் அணி ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் விளையாடாத ஹெட் இந்த போட்டியில் களம் இறங்கினார்.

- Advertisement -

ஆர்சிபி பரிதாப தோல்வி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் நின்று விளையாடிய இஷான் கிஷான் 48 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 94 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குறித்தது. ரோமாரியோ செப்பர்ட் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள், பில் சால்ட் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால் பின் வரிசையில் வந்த ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் இதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் டிம் டேவிட் காயமடைந்தது பெரிய பின்னடைவை உருவாக்கியது. இறுதியாக ஆர்சிபி 19.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கம்மின்ஸ் மற்றும் எசான் மலிங்கா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

மும்பை இடம் சிக்கும் ஆர்சிபி

தற்போது ஆர்சிபி 13 போட்டிகளில் 17 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 18 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டியில் 17 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் 13 போட்டிகளில் 16 புள்ளிகள் எடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் குஜராத் அணி தனது கடைசி ஆட்டத்தில் வலிமை குறைந்த சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணி தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் தற்போது வலிமை குறைந்துள்ள டெல்லி மற்றும் மும்பை அணியை எதிர்கொள்கிறது. மேலும் ஆர்சிபி பஞ்சாப் அணியை விட ரன் ரேட்டில் சரிந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. பஞ்சாப் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க : 16 பந்து 10 வருடம்.. ODI மெகா உலக சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. காட்டடி மாஸ் பேட்டிங்

எனவே பஞ்சாப் டெல்லி அல்லது மும்பை அணியை வென்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் தங்கிவிட அதிக வாய்ப்புகள் உண்டு. அதே சமயத்தில் ஆர்சிபி அணி தன்னுடைய கடைசி போட்டியில் லக்னோ அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் குஜராத் சிஎஸ்கே அணியிடம் தோற்க வேண்டும். இந்த வகையில் பார்க்கும்போது ஆர்சிபி மும்பை அணியிடம் பிளே ஆப் சுற்றில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -