கம்மின்ஸ்க்கு பிரஷர் குடுத்து பவுலிங் வாய்ப்ப வாங்கினேன்.. அப்பா கூட வேலை செஞ்சேன் – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
1700
Abhishek

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடித் தந்திருக்கிறார்கள். இதில் ஒருவரான அபிஷேக் சர்மா பந்து வீசும் வாய்ப்பை பெற்றது எப்படி? என பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 28 பந்தில் 34 ரன்கள் எடுத்திருந்த ஹெட் விக்கெட்டை இழந்ததும், அங்கிருந்து வேகமாக சரியத் தொடங்கியது. இதன் காரணமாக அதிரடி வீரர் ஹென்றி கிளாசன் பொறுமையாக விளையாடி 34 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 9 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 21 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். கோலர் கேட்மோர் விக்கெட்டை முதலில் கேப்டன் கம்மின்ஸ் கைப்பற்றி இருந்தார். இதற்கு அடுத்து ஷாபாஷ் அகமது வந்து ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் விக்கெட்டை கைப்பற்றினார்.

இவரது பந்துவீச்சு நன்றாக எடுபட்டதால் இவரைப் போலவே பந்து வீசும் அபிஷேக் ஷர்மாவை கம்மின்ஸ் பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். அபிஷேக் ஷர்மா தன் பங்குக்கு ரியான் பராக் மற்றும் சிம்ரன் ஹெட் மையர் விக்கெட்டை கைப்பற்றினார். 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 139 ரன்கள் மட்டுமே 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் எடுத்தது. ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய அபிஷேக் சர்மா கூறும் பொழுது “நான் பந்து வீசப் போகும் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் இதற்கு தயாராகவே இருந்தேன். மேலும் என்னுடைய பந்துவீச்சில் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நான் கடந்த இரண்டு வருடமாக சிறப்பாக பேட்டிங் செய்து வந்தாலும் பந்துவீச்சில் சில வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. நான் என் அப்பாவுடன் இணைந்து இதில் ஈடுபட்டேன். நாங்கள் பேட்டிங் செய்யும் பொழுது வேகமாக இருந்த ஆடுகளம், அவர்கள் பேட்டிங் செய்யும்பொழுது சுழலத் தொடங்கியது.

- Advertisement -

இதையும் படிங்க : என் வேலையை இந்த 3 பேர் ஈஸியா மாத்திடறாங்க.. வெட்டேரி எடுத்த அந்த முடிவு தான் வெற்றிக்கு காரணம் – பாட் கம்மின்ஸ் பேச்சு

எங்கள் கேப்டன் ஸ்பின்னர்களை நன்றாகப் பயன்படுத்தினார். நான் பந்துவீச்சு பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்டு கொடுத்து அழுத்தம்தான் இன்று கம்மின்ஸ் எனக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கொடுக்க முக்கிய காரணம். மொத்தத்தில் மெசேஜ் என்பது எளிமையானது. அவர்கள் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விளையாட வைத்தார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. தற்பொழுது அது நனவாகி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.