எத்தனை கேப்டன்களால் இப்படி செய்ய முடியும் ?- இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு !

0
2802

இந்திய மற்றும் இலங்கை அணி களுக்கிடையான ஒரு நாள் போட்டி தொடர் நேற்று தூங்கியது இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது .

இந்திய அணிக்காக கேப்டன் ரோஹித் சர்மா சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய ஒரு சிறப்பாக விளையாடினர் விராட் கோலி அபாரமாக ஆடி ஒரு நாள் போட்டியில் தனது 45 ஆவது சதத்தை நிறைவு செய்தார் . இலங்கை அணியில் கேப்டன் சனக்கா மற்றும் பத்தும் நிசாங்க ஆகியோர் சிறப்பாக ஆடினர்.சனக்கா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 108 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

பெரும்பான்மையான நேரங்களில் இந்த போட்டியானது இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தது இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில் அந்த அணிக்கு வெற்றி என்பது போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே எட்ட முடியாத தூரத்திற்கு சென்று விட்டது .

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசிவரை சிறப்பாக நின்று ஆடிய கேப்டன் தஷன் சனக்கா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது சதத்தை நிறைவு செய்தார் . சிறப்பாக ஆடிய இவர் 88 பந்துகளில் 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் . இதில் 12 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

இந்தப் போட்டியானது ஒருதலை பட்சமாகவே சென்றாலும் இறுதி ஓவரின் நான்காவது பந்தில் நடந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது . 98 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த சனக்கா நான் ஸ்ட்ரைக்கர் என்டில் இருக்கும் போது அவரை ரன் அவுட் செய்தார் முகமது சமி. அப்போது அவரிடம் கலந்து பேசிய கேப்டன் ரோஹித் அவுட்டிற்கான முறையீட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தார் . இதனால் தொடர்ந்து ஆடிய சனத்தா ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார் . இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னால் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் “ரோகித் சர்மா செய்தது போன்று எத்தனை கேப்டன்களால் செய்ய முடியும் ? விதிமுறைக்குட்பட்டு அவுட் செய்த போதிலும் சிறந்த ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்புடன் அவர் சனக்காவை மீண்டும் விளையாட அனுமதித்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போட்டி முடிவின்போது பேட்டி அளித்த ரோகித் சர்மா சணக்கா ஆடிய
விதம் மிகவும் அருமையாக இருந்தது அவரை இவ்வாறு நாங்கள் அவுட் செய்ய விரும்பவில்லை. அவர் அந்த சதத்தை எட்டுவதற்கான எல்லா தகுதியும் உள்ள வகையில் ஆடினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.