“இன்னும் எவ்வளவு நாள் இந்திய அணி தொடர்ந்து வீரர்களுக்கு ஆதரவளிக்கப் போகிறது”? – தினேஷ் கார்த்திக் கேள்வி!

0
152

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணியை விட 88 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தின் காரணமாக 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் நேதன் லியான் சிறப்பாகப் பந்துவீசி 64 ரன்களை விட்டுக் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

- Advertisement -

தன்னுடைய சிறப்பான பந்து வீக்கின் காரணமாக இவர் தான் போட்டியின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் போட்டி யுக்திகளை கேள்வி எழுப்ப இருக்கிறார். இது குறித்து கிரிக் பஸ் இணையதளத்திற்கு பேசியிருக்கும் அவர்” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் இறுதி வரிசை வீரர்களின் திறமையான பேட்டிங் காரணமாகத்தான் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் ” இந்திய அணியின் தோல்வியின் எதிரொலியாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனகளின் தொடர்ச்சியான மோசமான ஆட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளின் போது ஜடேஜா அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கை சுட்டிக்காட்டிய கார்த்திக் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் தொடர்ச்சியாக ரன்களை எடுக்க தவறி வருவது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும் இந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறதா என கேள்வி எழுப்பிய அவர் இதுபோன்ற ஆடுகளங்களில் போட்டி நடப்பதற்கு நீங்கள் தானே விருப்பம் தெரிவிக்கின்றீர்கள் அதுபோல அந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் கூறினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் அந்தப் போட்டிகளில் முத்திரையை பதிக்க கடினமான உழைப்பு உங்களிடம் இருந்து அவசியம் எனவும் தெரிவித்தார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய கார்த்திக் ” இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் இரண்டு முறை ஆட்டம் விளக்கும் போது உங்களுக்கே உங்களது திறமையின் மேல் சந்தேகம் வரும். ஆனால் இது போன்ற ஆடுகளங்களில் தைரியமாக ரண்களுக்கு போவதுதான் ஒரே வாய்ப்பு. உங்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய ஷாட்டிற்கு போங்கள். அழுத்தத்திலிருந்து விடுபடுவது தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மந்திரம் என குறிப்பிட்டார் அவர்.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரில் ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அக்சர் பட்டேல். மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி 185 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 111 ரன்கள் இந்த தொடரில் குவித்திருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் அக்சர் பட்டேலை தவிர வேற எந்த பேட்ஸ்மனும் சிறப்பாக ஆடவில்லை என்பதை சுட்டி காட்டினார். கடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்தார். பணி தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது மோசமாக விளையாடும் வீரர்களின் மீது அவ்வளவாக விமர்சனங்கள் வராது ஆனால் அணி ஒரு சில தோல்விகளை சந்திக்கும் போது அந்த வீரர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள். எனக்குரிய கார்த்திக் இன்னும் எவ்வளவு காலம் தான் இந்திய நிர்வாகம் இந்த வீரர்களுக்கு தனது ஆதரவை கொடுக்கப் போகிறது என கேள்வி எழுப்பினார்.