“இங்க எப்படிங்க பீல்டிங் பண்றது?.. பிளேயர்ஸ் அவங்கள அவங்களே காப்பாத்திக்கிட்டாங்க!” – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் வெளிப்படையான பேச்சு!

0
354
Cummins

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து மிகவும் பரபரப்பான நெருக்கமான போட்டிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நேற்று சென்னை மைதானத்தில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சவுத் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்று தரம்சாலா மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஹை ஸ்கோரிங் திரில்லர் ஆக அமைந்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 388 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 383 ரன்கள் எடுத்தது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மிக நெருக்கமான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

மேலும் தரம்சாலா மைதானம் பீல்டிங் செய்வதற்கு மிகவும் சவாலான மைதானமாக இருக்கிறது. இன்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் ஃபீல்டிங் செய்யும் பொழுது கால் முட்டி சறுக்கும் பொழுது சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது “பொதுவாக மொத்த ஆட்டமும் மிக அருமையாக இருந்தது. நான் அவ்வப்போது ஃபீல்டில் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாகவும் இருந்தது. நியூசிலாந்து எங்களைத் தொடர்ந்து வந்தனர்.

இன்று கிடைத்த துவக்க பார்ட்னர்ஷிப்பை நான் விரும்புகிறேன். இப்படித்தான் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் விளையாட்டை எடுக்க மற்றும் விரும்பும் முறை இப்படியானதுதான்.

இது நல்ல விக்கெட் என்று நான் நினைத்தேன். நாங்கள் பேட்ச்களில் சரியாகப் பந்து வீசினோம். நடுநடுவில் நாங்கள் அதிகம் பந்தை வெளியில் வைத்து விட்டோம். சில நல்ல பார்ட்னர்ஷிப்புகளை முறியடிப்பது கடினமாக இருந்தது.

பீல்டிங்கை பொறுத்த வரை இந்த மைதானத்தில் அது சுலபமான விஷயம் கிடையாது. வீரர்கள் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொண்டனர். உங்களுக்கு அடுத்த போட்டிக்கு சில நாட்கள் இடைவெளி உள்ளது. நாங்கள் இப்போது வெற்றியை எடுத்துக் கொண்டு, அடுத்து மீண்டும் போட்டிக்கு வருவோம்!” என்று கூறியிருக்கிறார்!