“சர்பராஸ் கான் சரியா விளையாட மாட்டாருனு உங்களுக்கு எப்படி தெரியும்?” – தேர்வு குழுவுக்கு எதிராக கங்குலி முதல் முறையாக பேச்சு!

0
275
Ganguly

இங்கிலாந்தில் நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, ஒருமாத கால ஓய்வுக்கு அடுத்து, இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இதில் இந்திய அணி அடுத்த மாதம் 12ஆம் தேதி முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு
நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது!

- Advertisement -

இந்த சுற்று பயணத்திற்கான இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்காக கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக இந்தத் தொடரிலும் தொடர்கிறார். டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.

இதில் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டில் சிவப்பு பந்தில் மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்த மும்பைக்காக விளையாடும் வலது கை பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை.

இது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விமர்சனமாக உருவெடுத்தது. பலரும் இதற்கு தங்களுடைய எதிர்ப்புகளை கடுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் சர்ப்ராஸ் கான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் , அதேபோல் களத்தில் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இந்த காரணத்தால்தான் அவரைத் தேர்வு செய்யவில்லை என்று கூறியிருந்தது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி முதல்முறையாக இந்த அமைப்புக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

“ஜெய்ஸ்வால் ரஞ்சி டிராபி, துலிப் டிராபி, இரானி டிராபியில் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இதனால் இவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் நினைக்கிறேன்.

அதே சமயத்தில் சர்பராஸ் கானை நான் உணர்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் இதுவரை அடித்துள்ள ரன்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்க வேண்டும். கடந்த ஐந்து முதல் ஆறு வருடங்களில் உள்நாட்டில் ரன்கள் குவித்த அபிமன்யு ஈஸ்வரனுக்கும் இதே போல் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

இந்த இருவரும் தவிர்க்கப்பட்டு இருப்பது எனக்கு பெரிய ஆச்சரியத்தை தருகிறது. இவர்கள் இருவருக்கும் எதிர்காலத்தில் வாய்ப்புகள் தரப்படுமா? ஜெய்ஸ்வால் நல்ல தேர்வு என்பதில் சந்தேகம் இல்லை.

சர்ப்ராஸ் கான் வேகப் பந்துவீச்சுக்கு எதிராக சரியாக விளையாடவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அவருக்கு அதில் பிரச்சனை இருந்திருந்தால் இந்தியா முழுக்க இவ்வளவு ரன்கள் அவரால் எடுத்திருக்க முடியாது. இதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!