நேர்மையா சொல்றேன்.. இந்திய பவுலிங் யூனிட்தான் உலகத்துல பெஸ்ட்..! – பல்டி அடித்த இலங்கை பயிற்சியாளர்!

0
1023
ICT

இந்திய அணி இன்று நடப்பு உலக கோப்பையில் இன்று ஏழாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து மும்பை மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்தப் போட்டிக்கு இந்திய அணியில் எந்த பெரிய மாற்றங்களும் இருக்காது. கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடும் அதே அணியைக் கொண்டு விளையாடவே வாய்ப்புகள் மிக அதிகம்.

- Advertisement -

இலங்கை அணியை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் அதிரடியான வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தார்கள்.

மேலும் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கே அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. ஆனாலும் இலங்கை பேட்ஸ்மேன்கள் தங்களுடைய வேலையை பேட்டிங் செய்ய சாதகமான மும்பை ஆடுகளத்தில் செய்ய முடிந்தால், அவர்களால் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இலங்கைப் பயிற்சியாளர் சில்வர்வுட் உண்டு பேசும் பொழுது ” ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட படுதோல்வி இலங்கை வீரர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக விளையாடும் உத்வேகத்தை அதிகரிக்கும்: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி விட்டோம்!” என்பதாகப் பேசியிருந்தார்!

இந்த நிலையில் மேலும் பேசி உள்ள இலங்கைப் பயிற்சியாளர் கூறும் பொழுது ” நீங்கள் இந்தியாவின் பந்து வீச்சு தாக்குதலை பார்த்தால், அது உலகின் மிகவும் வலுவான பந்துவீச்சு தாக்குதல். உலகில் எந்த அணியும் இப்படி ஒரு வலுவான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கவே விரும்பும். இதை நான் நேர்மையாகவே சொல்கிறேன்.

ஆனால் நாங்கள் இதை எங்கள் வீரர்களுக்கான சவாலாகவே பார்க்கிறோம். இப்படியான உலகத்தரமான பந்து வீச்சுக்கு எதிராக எங்கள் வீரர்களை நிறுத்துவதற்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. ஆனால் இந்தியாவிடம் இருப்பது மிகச்சிறந்த பந்து வீச்சு தாக்குதல் என்பதை யாராலும் மறைக்க முடியாது!” என்று கூறி இருக்கிறார்!

இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பொழுது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நான்காவது அணியாக யார் அரையிறுதிக்குள் வருவார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!

- Advertisement -