அவருடைய கம்பேக் மிகப்பெரிய சதத்துடன் தான் இருக்கும்! – மஞ்சரேக்கர் கணிப்பு!

0
2696

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது . நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது இந்தியா .

இந்தத் தொடரில் இந்தியாவின் விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடி இரண்டு சதங்களை அடித்தார் . அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றார் . சுப்மன் கில்லும் இந்தத் தொடரில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .

- Advertisement -

குறிப்பாக இந்த தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியதால் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை .

இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தொடரின் முதல் போட்டியில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர் . இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 50 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் அவருக்கு இரண்டு போட்டிகளில் துவக்கம் கிடைக்கும் அதை பெரிய ஸ்கோராக மாற்றாமல் ஆட்டமிழந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் பற்றி கவலைப்பட வேண்டிய அளவிற்கு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் . அவர்தான் பழமையாக அடிக்கும் சாட்களை மிகச் சிறப்பாகவே ஆடுகிறார் . என்று கூறினார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ரோகித் சர்மாவை போன்ற ஒரு பேட்ஸ்மேன் அவர்களுக்கு ஸ்டார்ட் கிடைத்து விட்டால் அதை வைத்து மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர். அதனால் தான் அவர் போட்டியில் அடிக்கக்கூடிய 40 அல்லது 50 ரன்கள் நமக்கு பெரியதாக தெரியவில்லை . அவர் நல்ல பார்வையில் இருப்பதாகவே நினைக்கிறேன் . வெகு விரைவிலேயே அவரிடமிருந்து ஒரு பெரிய கோரை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

இந்திய அணியானது வருகின்ற 18ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் ஆட இருக்கிறது . இந்தத் தொடருக்காக இந்திய அணி ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளது. நியூசிலாந்து அணியுடனும் இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அந்தப் போட்டிகளில் ரோகித் சர்மா தனது சதத்தை பதிவு செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.