இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வீரர் – ப்ரெண்டன் மெக்கல்லம் பெருமிதம்

0
352
Brendon McCullum KKR

கோடிக்கணக்கான கிரிக்கெட் இரசிகர்களின் காத்திருப்புக்கு பலன் துவங்கப் போகும் நாள் இது. இன்று மாலை உலகின் நம்பர் 1 ட்வென்ட்டி ட்வென்டி தொடர் மும்பையில் தொடங்க இருக்கிறது.

ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்தில் சரியான அணிக்கலவைக்கான வீரர்களை வாங்கி, பயிற்சியை முடித்துக்கொண்டு மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

- Advertisement -

தனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்களின் விலகல், காயங்கள், தேசிய அணிக்குப் பங்கேற்றல் போன்ற காரணங்களால், முதல் மூன்று ஆட்டங்களுக்கு ஏறக்குறைய எல்லா அணிகளுமே, விரும்பிய ஆடும் அணியை அமைக்க முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

முதல் ஆட்டத்தில், 2021 இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட சென்னையும் கொல்கத்தாவும் சந்திக்கின்றன!

இதில் கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர்தான் தன் அணிக்கான ஆட்ட யுக்தியை வெளிப்படையாய் வெளியில் அறிவிப்பவர். அவர் ஆடும் காலத்திலேயே “செய் அல்லது செத்து மடி” என்கிற அதிரடி போக்கில்தான் ஆடக்கூடியவர். இப்போது அதையே கொல்கத்தா அணியின் முகமாகவே மாற்றி வைத்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்சினையான ஓபனர் பிரச்சினையை, யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடேஷை வைத்து தீர்த்துவிட்டு, ஏலத்தில் ஸ்ரேயாஷை எடுத்து கேப்டன் பிரச்சினையையும் தீர்த்துள்ளார்.

- Advertisement -

நேற்று டைம் ஆப்ஸ் இன்டியாவிடம் பேசிய மெக்கல்லம் கேப்டன் ஸ்ரேயாஷை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

அதில் “ஏலத்தில் ஸ்ரேயாஷை வாங்கியது மிகச்சிறந்த ஒன்று. அவர் கொல்கத்தா அணிக்கு ஒரு தசாப்பத்திற்கான வீரர். நாங்கள் சேர்ந்து ஏதாவது செய்யவேண்டும். அதை நாளை (இன்று) துவங்க வேண்டும். அவர் தன் திறமையால் ஏற்கனவே உலகம் மதிக்கும்படி சாதித்து வைத்திருக்கிறார். இனி அவருக்கு வரும் ஆண்டுகளும் சிறப்பானதாகவே அமையும். அவரால் மிகச்சிறந்த வீரராக வரமுடியும். அதற்கான திறமையோடு அவர் இருக்கிறார். இப்படிப்பட்டவரே சேர்ந்து பணிபுரிய காத்திருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் அதில் அவர் “நான் விளையாடிய காலத்தில் ஆட்டத்தை எப்படி பார்த்தேனோ, அவரும் அப்படியே பார்க்கிறார். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரு இலக்கிற்காக, ஒருவரையொருவரை ஆதரித்து, துணையாய் இருக்கிறோம். நாங்கள் நேர்மறையான எண்ணத்தோடு ஆடுவோம்” என்றும் கூறியிருக்கிறார்!

பழைய மெக்கல்லம் ஆனால் புதிய ஸ்ரேயாஷை பார்ப்போம் போல!