ஹெல்மெட் கயிறை கடிக்கும் ஷாகிப்.. பின்னால் இருக்கும் பெரிய காரணம்.. தினேஷ் கார்த்திக் விளக்கம்

0
3220
Shakib al hasan

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் வங்கதேச அணி தற்போது தடுமாறி வருகிறது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷகீப் அல்ஹசன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது செய்த செயல் பார்வையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் சுழற்பந்து ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

அதற்குப் பிறகு தற்போது வங்கதேச அணி களம் இறங்கியது. விக்கெட்டுகள் மிக விரைவாக இழந்தாலும் ஆல் ரவுண்டர் ஷகீப் அல்ஹசன் 64 பந்துகளில் 32 ரன்கள் குவித்து மற்ற பேட்ஸ்மேன்களுக்கிடையே இருக்கும் தனது வேறுபாட்டை காண்பித்தார். இருப்பினும் அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் கயிற்றை கடித்தவாறே காணப்பட்டார். இது பார்வையாளர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வினோத செயல் குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கமெண்டரியில் ஈடுபட்டிருந்த வங்கதேச முன்னாள் வீரர் தமிம் இக்பால் இருவரும் விவாதித்த பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், ஷகீப் அல்ஹசன் தனது பார்வையை தக்க வைத்துக் கொள்ள ஹெல்மெட் கயிறு உதவுகிறது என்றும் இது பேட்டிங் நிலைப்பாட்டின் ஒரு முக்கியமான பகுதி ஆகும். இது தலையை நேராக வைத்திருக்கவும், தலைப்பகுதி லெக் சைடு திசையில் சாயாமல் இருப்பதற்கு உதவுவதாகவும் கூறி இருக்கிறார்.

அதாவது பேட்டிங்கின் போது தனது கவனத்தை வேறு எந்த திசையிலும் சிதறவிடாமல் தனது முழு சிந்தனை மற்றும் கவனத்தை தனக்கு எதிராக பந்து வீசும் பந்து வீச்சாளர்கள் மீதே வைத்துக்கொள்ள இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறி இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் போட்டியின் மீது தனது முழு கவனத்தை வைத்திருக்க ஏதேனும் ஒரு செயல்களில் ஈடுபடுவது உண்டு.

இதையும் படிங்க:16 வருடத்தில் முதல் கேப்டன்.. தோனி கோலி செய்யாத மோசமான சாதனையை செய்த ரோகித்.. இந்திய கிரிக்கெட்

அதேபோல வங்கதேச வீரரும் தனது முழு கவனமும் போட்டி மீது இருக்க இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கிறார். இருப்பினும் வங்கதேச அணியின் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் மொத்தமாக 308 ரன்கள் முன்னிலை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -