இந்த உலகக்கோப்பை முழுவதும் இந்திய பிளேயிங் 11 இப்படித்தான் இருக்கும் – ரோகித் சர்மா சூசக தகவல்!

0
648
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நேற்றுடன் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து இன்று பிரதான சுற்று போட்டிகள் ஆரம்பித்துள்ளன.

பிரதான சுற்றில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை இந்தியா பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்து இந்திய ரசிகர்கள் மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் தாண்டி உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா என்பதே ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிக நீண்ட தனது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்திய அணியில் பிளேயிங் லெவன் எப்படி அமைக்கப்படும் என்பதற்கு கூட அவர் பதிலளித்திருக்கிறார்.

ரோகித் சர்மா பேசும்பொழுது “இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி அழுத்தம் மிகுந்த போட்டி என்று நான் சொல்ல மாட்டேன். அழுத்தம் என்பது எல்லா போட்டிகளிலும் உள்ளதுதான். ஐசிசி போட்டிகளை வெல்வது எங்களுக்கு சவாலாக இருக்கிறது உண்மைதான். இப்படியான பெரிய தொடர்களில் நாங்கள் விரும்பும் படியான ஆட்டத்தை நாங்கள் விளையாடவில்லை. ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது இங்கு எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறோம். எனவே அதைச் சரியாக பெற நாங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதை உணர்ந்திருக்கிறோம் ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா
” ஆண்டின் இந்த நேரத்தில் எல்லா அணிகளும் எப்படி செயல்படுகின்றன என்பதை குறித்து எங்களிடம் தரவுகள் இல்லை. ஆனால் இப்படியான நேரங்களில் நீங்கள் உங்கள் உள்ளுணர்வை கேட்டுத்தான் வேலை செய்ய வேண்டும். தற்போதைய பார்ம் மற்றும் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்று ஒரு வீரரை பார்க்க வேண்டும். நான் இது சம்பந்தமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். நான் எனது பிளேயிங் 11 பற்றி எப்பொழுதும் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன். ஆட்டத்திற்கு ஒன்று மற்றும் இரண்டு மாற்றங்களை செய்ய நான் கவலைப்படுவது இல்லை. இப்படியான மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் ” என்றும் கூறியிருக்கிறார்!