கிரிக்கெட்

போட்டிக்கு முன் இங்கிலாந்து & இந்திய வீரர்கள் ஏன் நீல நிற தொப்பி அணிந்தனர் ? காரணம் இதுதான்

இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் கடந்த வருடம் கோவிட்டால் தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியை நேற்று முதல் பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட ஜஸ்ப்ரீட் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்றார்!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாஸில் இங்கிலாந்து கேப்டன் டாஸில் வென்று, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி இந்திய அணியின் இன்னிங்சை துவங்க சுப்மன் கில் மற்றும் செதேஷ்வர் புஜாரா களமிறங்கினார்கள். 46 ரன்களில் இருவரையும் ஆன்டர்சன் வெளியேற்றினார். அடுத்து ஹனுமா விகாரி, விராட் கோலி இருவரையும் 71 ரன்களில் மேத்யூ போட்ஸ் வெளியேற்றினார். திரும்ப வந்த ஆன்டர்சன் 98 ரன்களில் ஸ்ரேயாஷை பெவிலியன் அனுப்பி வைக்க, இந்திய அணி நூறு ரன்களுக்குள் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு உள்ளானது!

இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், ஐடேஜா ஜோடி நின்று விளையாட ஆரம்பித்தது. ஒரு புறத்தில் ஜடேஜா நிதானமாக ஆட, மறு புறத்தில் அதிரடியில் இறங்கிய ரிஷாப் பண்ட், 89 பந்துகளில் தனது ஐந்தாவது சதத்தைப் பதிவு செய்து 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக நின்று விளையாடிய ஜடேஜா அரைசதமடித்து 83 ரன்களில் ஆட்டமிழக்காமல் நிற்க, அவரோடு முகம்மத் சமி 0 ரன்னில் இருக்க, முதல் ஆட்ட நேர முடிவில் 73 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி!

இன்று இரண்டாம் நாள் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் நீல நிற தொப்பி அணிந்து களத்திற்கு வந்தனர். இதற்கான காரணம் என்னவென்றால்; புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்க்காகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் பாப் வில்லிஸ் அறக்கட்டளைக்கு பணம் சேர்க்கவும் இப்படி இரு அணியினரும் நீல நிற தொப்பி அணிந்து விளையாடி வருகிறார்கள்!

- Advertisement -

இரண்டாம் நாள் களமிறங்கிய ஜடேஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்து 104 ரன்களில் வெளியேறினார். இந்திய கேப்டன் பும்ரா ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 29 ரன்கள் அடித்து உலகச் சாதனை படைத்தார். இறுதியில் 416 ரன்கள் குவித்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆன்டர்சன் 60 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்!