தோனி அடித்த 110 மீட்டர் சிக்ஸரால் வந்த வினை.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமான வினோதம்.. என்ன நடந்தது?

0
667
Dhoni

நேற்று சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதை 10 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. ஆர்சிபி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. இதில் தோனி கடைசி ஓவரின் முதல் பந்தில் அடித்த 110 மீட்டர் சிக்ஸர், அந்த அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்த வினோத சம்பவம் நடந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் இழந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் விராட் கோலி, ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் மேக்ஸ்வெல் என பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த எல்லோரும் சிறப்பாக விளையாடினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றும், 201 ரன்கள் எடுத்தால் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலையில் சிஎஸ்கே அணி களம் இறங்கியது. இறுதியாக அந்த அணி 19 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது. மேற்கொண்டு அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு, யாஸ் தயால் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் அந்த ஓவரின் முதல் பந்தை தோனி 110 மீட்டருக்கு சிக்ஸர் அடித்தார். இதனால் அடுத்த ஐந்து பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் அடுத்த பந்தில் தோனி ஆட்டம் இழக்க, சர்துல் தாக்கூர் இரண்டு பந்தில் ஒரு ரன் எடுக்க, ஜடேஜா கடைசி இரண்டு பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போக, 10 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

நேற்று மழை பெய்த காரணத்தினால் மைதானத்தில்ஈரம் அதிகமாக இருந்தது. இதனால் ஈரத்தில் ஊறிய பந்தை வீசுவதற்கு பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டார்கள். இதன் காரணமாக கடைசி ஓவரில் ஈரமான பந்தை யார்க்கர் வீச முடியாமல், யாஸ் தயால் தோனிக்கு சிக்சர் கொடுத்தார். அந்தப் பந்து மைதானத்தை விட்டு சென்று விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க: 2 பீமர் நோ பால் வீசியும்.. வெளியே அனுப்பப்படாத ஆர்சிபி பெர்குசன்.. விதி என்ன சொல்கிறது.?

எனவே ஈரம் இல்லாத புதிய பந்து மாற்றப்பட்டது. இந்தப் பந்தை கையில் நன்றாக பிடித்து கிரிப் செய்ய முடிந்தது. இது பந்துவீச்சாளருக்கு நல்ல உதவி செய்தது. இதன் காரணமாக அடுத்த ஐந்து பந்துகளையும் மெதுவான பந்தாக, கட்டராக வீசி யாஸ் தயால் அசத்தினார். இறுதியில் தோனி அடித்த மெகா சிக்ஸ் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த வினோத சம்பவம் அரங்கேறி விட்டது. தற்பொழுது இது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள், கிரிக்கெட் எப்படியான திருப்பம் நிறைந்த விளையாட்டு என ஆச்சரியப்பட்டு பேசி வருகிறார்கள்.