நேற்று இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட முதல் டி20 போட்டியில் நடுவர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு தீர்ப்பு கொடுத்தார்கள். 2019 ஆம் ஆண்டு இதே மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு நடுவர்கள் தவறாக நடந்து, நியூசிலாந்து கைக்கு செல்ல இருந்த உலகக் கோப்பையை பறித்து விட்டார்கள்.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. கட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் எடுக்கக்கூடிய இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கத்தை தந்தார்கள். ஆனால் கடைசியில் வெறும் 30 ரன்கள் பறிகொடுத்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா ஹர்திக் பாண்டியா வீசிய 12வது ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். அப்பொழுது பந்துவீச்சாளர் முனைக்கு இரண்டாவது ரன் ஓடும் பொழுது அடிக்கப்பட்ட பந்து ஸ்டெம்ப்பை தாக்கியது. எனவே மூன்றாவது நடுவரிடம் செல்ல பேட்ஸ்மேன் கிரீஸ் உள்ளே வந்துவிட்டார், எனவே ரன் அவுட் இல்லை என தீர்ப்பு தரப்பட்டது.
அதே சமயத்தில் ஸ்டெம்பை அடித்த பந்து நேராக பவுண்டரிக்கு சென்று விட்டது. ஓடி எடுத்த இரண்டு ரன்கள் மற்றும் ஓவர் துரோவில் கிடைத்த நான்கு ரன்கள் என மொத்தம் ஆறு ரன்கள் தர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் நடுவர்கள் ஐந்து ரன்கள் மட்டுமே தந்தார்கள். காரணம் பதும் நிஷாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் இரண்டாவது ரன் ஓடும்பொழுது, ஃபீல்டர் பந்தை கையில் இருந்து விடுவித்த நொடியில், இருவருமே கிராஸ் ஆகவில்லை. அப்படி கிராஸ் ஆகி இருக்காவிட்டால் அந்த ஒரு ரன் ஓவர் த்ரோவில் கிடைக்கும் ரன் உடன் சேர்க்கப்படாது. இதன் காரணமாகவே இரண்டாவது ரன் சேர்க்கப்படாமல், ஓவர் த்ரோவில் வந்த பவுண்டரியுடன் ஓடி எடுத்த ஒரு ரன் சேர்த்து 5 ரன் கொடுக்கப்பட்டது.
இதேபோல் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் மார்ட்டின் கப்தில் த்ரோ அடித்த பந்து பென் ஸ்டோக்ஸ் கைகளில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. அப்பொழுது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆதில் ரஷீத் இரண்டு ரன்கள் ஓடி எடுத்திருந்தார்கள். மொத்தம் ஆறு ரன்கள் கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து இரண்டு பேட்ஸ்மேன்களும் இரண்டாவது ரன்னில் கிராஸ் ஆகவில்லை என்று கூறியும், அப்போது நடுவர்கள் குமார் தர்மசேனா மற்றும் மரைஸ் எராஸ்மஸ் மூன்றாவது நடுவரிடம் செல்லவில்லை.
இதையும் படிங்க : நான் ஜெய்ஸ்வால்.. எங்க ஸ்டைலே வேற.. நாங்க இப்படித்தான் பியூச்சருக்கு பிளான் பண்ணி இருக்கோம் – சுப்மன் கில் பேட்டி
இதனால் ஓடி எடுக்கப்பட்ட இரண்டு ரன் கொடுக்கப்பட்டதால் பேட்டிங் முனையில் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடினார். இல்லையென்றால் ஆதில் ரஷீத் பேட்டிங் முனையில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இரண்டு பந்துக்கு நான்கு ரன்கள் என்கின்ற நிலையில் அவர் விளையாடியிருக்க வேண்டும். நியூசிலாந்து உலகக் கோப்பையை வெல்ல அதிகபட்ச வாய்ப்புகள் இருந்திருக்கும். அன்று கள நடுவர்கள் இருவரும் மிகப் பிடிவாதமாக மூன்றாவது நடுவரிடம் செல்லாமல் பெரிய தவறு செய்து விட்டார்கள். இதை போட்டிக்குப் பின்பு நடுவர் குமார் தர்மசேனா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!