உலக டெஸ்ட் பைனல் 2025.. இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆட என்ன நடக்க வேண்டும்.?.. 18 வருடம் கழித்து வாய்ப்பு.. முழு விவரம்

0
2384

ஐசிசி தொடர்களில் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வரும் நிலையில், ஐசிசி டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஒரு பொன்னான வாய்ப்பு உருவாகி உள்ளது.

டிசம்பர் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவில்லை. இந்த நிலையில் அந்த ஏக்கத்தை தீர்க்க தற்போது ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாக 2008ஆம் ஆண்டு கடைசியாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இந்திய அணி அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணியோடு எந்த தொடரிலும் விளையாடுவதில்லை. இருப்பினும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் விளையாடி வந்தன.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் 2008ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வாசிம் ஜாஃபர், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய கடைசி போட்டி டிராவில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் 2023 -2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 68.52 சதவீத புள்ளிகளோடு முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணி 68.50 சதவீத புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்த வருட இறுதியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இருப்பினும் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி அந்த இரண்டு தொடர்களை வெல்லும் பட்சத்தில் இந்தியா முதல் இடத்தில் இருக்கும்.

- Advertisement -

அதுவே பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இறுதிப் போட்டிக்கு வர வேண்டுமானால் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளோடு டெஸ்ட் தொடரும், மேலும் தென்னாப்பிரிக்கா அணியோடு ஒரு டெஸ்ட் போட்டியும் இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் பாகிஸ்தான் அணி 36.66% புள்ளிகள் உடன் ஐந்தாவது இடம் வகிக்கிறது. பாகிஸ்தான் அணி இந்த தொடர்களை வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி அடையும்.

இதையும் படிங்க:வெறும் 116 ரன்.. சச்சின் சங்ககாரா செய்த சாதனையை செய்ய காத்திருக்கும் கோலி.. இலங்கை தொடரில் பெரிய வாய்ப்பு

இதனால் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ள நிலையில், கடந்த இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை தழுவி வருவதால், இந்த தொடரின் இறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் தொடரை கைப்பற்றினால் அது வரலாற்று நிகழ்வாக இருக்கும்.