வெறும் 116 ரன்.. சச்சின் சங்ககாரா செய்த சாதனையை செய்ய காத்திருக்கும் கோலி.. இலங்கை தொடரில் பெரிய வாய்ப்பு

0
304

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் விராட் கோலி களம் இறங்கி ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கிறார். அது உலகத்தின் மிக முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா, ரிக்கி பாண்டிங் ஆகியோரது எலைட் கிளப்பில் இணையப் போகிறார்.

விராட் கோலி டி20 உலக கோப்பை வென்ற கையோடு டி20 பார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளார்.

- Advertisement -

இந்தியா தற்போது டி20 போட்டிகள் இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வரும் நிலையில் இந்தத் தொடர் முடிந்ததோடு அடுத்ததாக ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதற்காக இந்தியாவின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க தயாராக இருக்கின்றனர். இலங்கை மண்ணில் எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடிய விராட் கோலி இதுவரை 72 சர்வதேச போட்டிகளில் விளையாடி 4018 ரன்களை குவித்திருக்கிறார்.

சிறப்பான ரெக்கார்டுகளை விராட் கோலி வைத்திருக்கும் நிலையில் இனி இலங்கை அணிக்கு எதிராக விளையாடப் போகிற போட்டிகளில் 116 ரன்கள் குவிப்பதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே அந்த சாதனை பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், சங்ககாரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர். இதில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 664 சர்வதேச போட்டியில் விளையாடி 34,357 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 48 பேட்டிங் சராசரி அடங்கும். அதிகபட்சமாக 248 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா 594 சர்வதேச போட்டிகளில் விளையாடி 28016 ரன்கள் குவித்து அதிகபட்சமாக 319 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 560 போட்டிகளில் விளையாடி 27,483 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி மொத்தமாக 530 போட்டிகளில் விளையாடி 26884 ரன்கள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க:600 டி20 விக்கெட்.. ரஷித் கான் 2வது வீரராக இமாலய சாதனை.. சிஎஸ்கே வீரர் ரெக்கார்ட் மட்டும் தான் மீதி

அதிகபட்சமாக 254 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி 80 சதங்கள் மற்றும் 140 அரை சதங்கள் அடித்துள்ளார். 116 ரன்கள் குவிப்பதன் மூலமாக இவர் இந்த வரலாற்று சாதனையை படைக்கப் போகிறார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 386 ரன்கள் எடுப்பதன் மூலமாக விராட் கோலி இலங்கை ஜாம்பவான் சங்ககாராவின் 14234 ரன்கள் சாதனை முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில் சச்சின் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்

- Advertisement -