இனி ஐஸ்கிரீமை நிம்மதியாக சாப்பிடலாம் – யு19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் யாஷ் துல் கலகலப்பான பேச்சு

0
463
Yash Dhull

ஐசிசி சார்பில் நடத்தப்படும் அண்டர் 19 உலக கோப்பை தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது. இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டனர். முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணி 10 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ரியூ அதிகபட்சமாக 95 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ராஜ் பாவா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல ரவிக்குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் விளையாடிய இந்திய அணி 48ஆவது ஓவரில் 195 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அண்டர் 19 உலக கோப்பை தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக சைகைக் ரசீது மற்றும் நிஷாந்த் சிந்து 50 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சில் அசத்திய ராஜ் பாவா பேட்டிங்கிலும் 35 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி கைப்பற்றும் ஐந்தாவது அண்டர் 19 உலக கோப்பை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி நாங்கள் ஐஸ்க்ரீமை சாப்பிடலாம்

இந்திய அணியின் கேப்டனான யாஷ் துல் அண்டர் 19 உலக கோப்பை தொடருக்காக உடலளவிலும் மனதளவிலும் எங்களை நாங்கள் கட்டுக்கோப்பாக வைத்திருந்தோம். குறிப்பாக உணவு முறையில் நாங்கள் நிறைய கட்டுப்பாடுகளை வைத்திருந்தோம். உலகக் கோப்பை தொடர் வென்றவுடன் எங்கள் அனைவருக்கும் தனித்தனியாக ஐஸ்கிரீம் வந்து சேர்ந்தது. இனி ஐஸ்கிரீமை நாங்கள் எந்தவித கவலையுமின்றி நிறைய சாப்பிடலாம் என்று கலகலப்பாக கூறினார்.

மேலும் பேசிய அவர் அண்டர் 19 உலக கோப்பை தொடரை கைப்பற்றியது எங்கள் அனைவருக்கும் மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். எங்களுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். உடல் வலிமை எந்தளவுக்கு எங்களுக்கு இருந்ததோ, அதே அளவு மன வலிமையும் எங்களுக்கு இருந்தது. அதன் காரணமாகவே எங்களால் இந்த கோப்பையை கைப்பற்ற முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பேட்டிங்கிலும் 35 ரன்கள் குவித்த இந்திய அணியை சேர்ந்த “ராஜ் பாவா” ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் அதிகபட்சமாக 506 ரன்கள் குவித்து அசத்திய தென்ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த “குட்டி ஏபி டிவில்லியர்ஸ்ஸான டிவால்ட் பிரேவிஸ்” தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.