உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இந்தியா என்னென்ன செய்ய வேண்டும் ?

0
264
Virat Kohli World Test Championship

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இரசிகர்களின் வரவேற்பு வெகுவாகக் குறைந்த காரணத்தினால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காக்கும் பொருட்டு சுவராசியப்படுத்த, பகலிரவு டெஸ்ட் போட்டிகளை கொண்டுவந்ததோடு, ஆட்டங்கள் முடிவு காணும் வகையில் ஆடுகளங்களை அமைக்க ஐ.சி.சி கேட்டுக்கொண்டது!

இத்தோடு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு சாம்பியன்ஷிப் போட்டி தொடர்கள் இருப்பது போல், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் உலக சாம்பியன்ஷிப் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளில் எந்த இரண்டு அணிகள் சிறப்பாகச் செயல்படுகிறதோ, அந்த அணிகளைக் கொண்டு, பொதுவான ஒரு நாட்டில் இறுதிபோட்டி நடத்தப்பட்டு, வெல்லும் அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கும் முறையையும் ஐ.சி.சி அறிமுகப்படுதியது.

- Advertisement -

இந்த அடிப்படையில் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான தகுதியை இந்திய அணியும், நியூசிலாந்தும் அணியும் பெற்றன. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த இறுதிபோட்டியில் கடைசி நாளில் சிறப்பாகச் செயல்பட்ட நியூசிலாந்து அணி, முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை கைப்பற்றியது!

அடுத்து தற்போது 2021-23 ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற நாடுகள் விளையாடி வருகின்றன. இதில் தற்போது முதல் நான்கு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா, செளத் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு அணிகளில் இரண்டு அணிகளே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குப் தகுதி பெறும் வாய்ப்பில் இருக்கின்றன.

இந்திய அணி அடுத்து உள்நாட்டில் பங்களாதேஷ் அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணியோடு நான்கு போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த ஆறு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் 72 புள்ளிகளைப் பெறும், மேலும் சதவிகிதப் அடிப்படையில் 68.05 புள்ளிகளைப் பெறும். இந்த நிலையில் மற்ற மூன்று அணிகளின் போட்டி முடிவுகள் எவ்வாறு அமைந்தால், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குள் நுழையும் என்று பார்ப்போம்.

- Advertisement -
ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா அணி அடுத்து பத்து டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட உள்ளது. இலங்கை அணியுடன் 1, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக 2, இந்திய அணிக்கு எதிராக 4 என மொத்தம் பத்து டெஸ்ட் ஆட்டங்கள். இதில் குறைந்தபட்சம் நான்கு போட்டிகளில், தோல்வியும், ஒரு போட்டியில் டிராவும் கண்டால், இந்திய அணியின் 68.05 புள்ளிகளை விட குறைவாகப் பெற்று பின்தங்கும்.

தென் ஆப்பிரிக்கா:

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 3, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக 2, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 என மொத்தம் எட்டுப் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் மூன்றில் தோல்வியடைந்து ஐந்தில் வெற்றி பெற்றாலும், இந்திய அணியை விட குறைவான புள்ளிகளையே தென் ஆப்பிரிக்க எடுக்கும்.

பாகிஸ்தான்:

இங்கிலாந்திற்கு எதிராக 3, நியூசிலாந்திற்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக 2 என ஏழு ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி இரண்டு டிராவை சந்தித்தாலே புள்ளி அடிப்படையில் இந்திய அணியை விட பின்தங்கும்!