முதல் நாள் ஏலம் முடிவில் அனைத்து அணிகள் வாங்கிய வீரர்கள் பட்டியல் மற்றும் மீதமுள்ள தொகை

0
2908
Ishan Kishan Faf du Plessis Deepak Chahar

2022 ஐ.பி.எல் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இந்திய ஒப்பனர் ஷிக்கர் தவான் முதல் வீரராக ஏலம் போனார். ஹூக் எட்மியேட்ஸ் தலைமையில் சிறப்பாக நடந்து கொண்டிருந்த ஏலத்தில் திடீரென ஓர் அதிர்ச்சி. நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் ஏலம் விடுபவருக்கு இரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுந்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மணி நேரம் கழித்து சாரு சர்மா ஏலத்தை தொடர்ந்தார். முதல் நாள் முடிவில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியுள்ளது என்பதைப் பின்வரும் பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே பெரும்பாலும் சென்ற ஆண்டு வைத்திருந்த வீரர்களையே வாங்க எண்ணியது. அதே போல் தான் ஏலத்திலும் செயல்பட்டனர். ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஃபாப் டூ பிளசிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னாவை வாங்க மறுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக தீபக் சாஹர் உயர்ந்தார்.

வாங்கிய வீரர்கள் : ராபின் உத்தப்பா ( 2 கோடி ) டுவெய்ன் பிராவோ ( 4.4 கோடி ) ராயுடு ( 6.75 கோடி ) தீபக் சாஹர் ( 14 கோடி ) டுஷார் தேஷ்பாண்டே ( 20 லட்சம் ) கே.எம்.ஆசிப் ( 20 லட்சம் )

மீதமுள்ள தொகை : 20.45 கோடி

மும்பை இந்தியன்ஸ்

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை நீண்ட நேரம் மௌனமாக இருந்தது. விக்கெட் கீப்பர்கள் பட்டியல் வந்தவுடன் அதிரடி காட்டியது. எவ்வளவு செலவானாலும் இஷான் கிஷனை வாங்க வேண்டுமென்ற முடிவில் பெரிய தொகைக்கு வாங்கியது. பின்னர் யு19 ஆட்டநாயகன் பிரீவிஸையும் எடுத்தது.

வாங்கிய வீரர்கள் : இஷான் கிஷன் ( 15.25 கோடி ) டெவல்ட் பிரீவிஸ் ( 3 கோடி ) முருகன் அஷ்வின் ( 1.6 கோடி ) பாசில் தம்பி ( 30 லட்சம் )

மீதமுள்ள தொகை : 27.85 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ்

முதல் நாள் ஏலத்தில் மிகவும் பரபரப்பாக அதிகமான வீரர்களுக்கு கையை உயர்த்தியது டெல்லி. சுருக்கமாக சொன்னால் வீரர்களின் விலையை உயர்த்தி விடுவதில் குறியாக இருந்ததாக ரசிகர்கள் நகையாடினர். குறைந்த விலையில் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரை கைப்பற்றி அசத்தியது.

வாங்கிய வீரர்கள் : டேவிட் வார்னர் ( 6.25 கோடி ) ஷர்தூல் தாக்கூர் ( 10.75 கோடி ) மிட்செல் மார்ஷ் ( 6.5 கோடி ) குல்தீப் யாதவ் ( 2 கோடி ) முஸ்டாபிசுர் ரஹ்மான் ( 2 கோடி ) கே.எஸ். பரத் ( 2 கோடி ) நாகர்கோட்டி ( 1.1 கோடி )சர்பராஸ் கான் ( 20 லட்சம் ) அஷ்வின் ஹெப்பர் ( 20 லட்சம் )

மீதமுள்ள தொகை : 16.5 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணி தங்களுக்குத் தேவையான வீரர்களை வாங்குவதில் திட்டவட்டமாக இருந்தது. முன்னரே முடிவு செய்து வைத்திருந்த வீரர்களை வாங்குவதற்காக பணத்தை வாரி வழங்கினர். கேப்டன் பதவிக்காக ஷ்ரேயாஸ் ஐயரை போராடி வாங்கியது.

வாங்கிய வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர் ( 12.25 கோடி ) கம்மின்ஸ் ( 7.25 கோடி ) நிதிஷ் ராணா ( 8 கோடி ) ஷிவம் மாவி ( 7.25 கோடி ) ஷெல்டன் ஜாக்சன் ( 60 லட்சம் )

மீதமுள்ள தொகை : 12.65 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மைக் ஹெசன் தலைமையிலான ஆர்.சி.பி தங்கள் பழைய வீரர்கள் ஹர்ஷல் பட்டேல் & ஹசரங்காவை பல கோடிகள் கொடுத்து வாங்கியது. அதே சமயம் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய சுழற்பந்து வீச்சாளர் சாஹலை வாங்காததால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். சி.எஸ்.கே நம்பிக்கை நட்சத்திரம் டு பிளசிஸை வாங்கி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வாங்கிய வீரர்கள் : வணிந்து ஹசரங்கா ( 10.75 கோடி ) ஹர்ஷல் பட்டேல் ( 10.75 கோடி ) ஃபாப் டு பிளசிஸ் ( 7 கோடி ) ஹேசல்வுட் ( 7.75 கோடி ) தினேஷ் கார்த்திக் ( 5.5 கோடி ) ஷாபாஸ் அஹமத் ( 2.40 கோடி ) அஞ்சு ராவத் ( 3.4 கோடி ) ஆகாஷ் தீப் ( 20 லட்சம் )

மீதமுள்ள தொகை : 9.25 கோடி

லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ்

புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டது. அதிரடி ஆல்ரவுண்டர்களை தங்கள் அணிக்குள் வளைத்துப் போட்டது. பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தினர். ஏலம் முடியும் நேரத்தில் இளம் வேகம் ஆவேஷ் கானை வாங்கினார். தீபக் ஹூடா மற்றும் க்ருனால் பாண்டியா இடையே சண்டை நடந்தது அனைவருக்கும் தெரியும். அவர்கள் இருவரும் தற்போது ஒரே அணியில் விளையாட உள்ளனர்.

வாங்கிய வீரர்கள் : ஜேசன் ஹோல்டர் ( 8.75 கோடி ) குவின்டன் டி காக் ( 6.75 கோடி ) ஆவேஷ் கான் ( 10 கோடி ) க்ருனால் பாண்டியா ( 8.25 கோடி ) தீபக் ஹூடா ( 5.75 கோடி ) மார்க் வுட் ( 7.5 கோடி ) மணிஷ் பாண்டே ( 4.6 கோடி ) அன்கித் ராஜ்பூட் ( 50 லட்சம் )

மீதமுள்ள தொகை : 6.9 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏலத்தில் மிகவும் துல்லியமாக செயல்பட்ட மற்றொரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அனுபவம் வாய்ந்த வீரர்களை வாங்கி அணிக்கு பலம் சேர்த்தது. பட்லர் இருக்கும் அதே அணியில் அஷ்வினை எடுத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் நாகையாடினர். ஏற்கனவே பட்லரை மான்கண்டிங் மூலம் அவுட் செய்தது சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால் தற்போது அவர்களுக்கிடையே எந்த வித மனஸ்தாபமும் இல்லை என்று அந்நிர்வாகம் பதிவிட்டது.

வாங்கிய வீரர்கள் : தேவ்தத் படிக்கல் ( 7.75 கோடி ) பிரசித் கிருஷ்ணா ( 10 கோடி ) ரவிச்சந்திரன் அஷ்வின் ( 5 கோடி ) சாஹல் ( 6.5 கோடி ) போல்ட் ( 8 கோடி ) ஹெட்மேயர் ( 8.5 கோடி ) ரியான் பராக் ( 3.8 கோடி ) கே.சி.கரியப்பா ( 30 லட்சம் )

மீதமுள்ள தொகை : 12.15 கோடி

பஞ்சாப் கிங்ஸ்

அதிக தொகை கொண்ட பஞ்சாப் அணி அபாரமான வீரர்களை வாங்கி அற்புதம் செய்தது. ஏலப் பட்டியலில் முதல் வீரரை இவர்கள் தான் வாங்கினார்கள். இதற்கு முன்னர் நடந்த ஏலத்தில் தேவை இல்லாத வீரர்களுக்கு அதிக செல்விட்ட தவறை இம்முறை பஞ்சாப் அணி தவிர்த்தது. தமிழக வீரர் ஷாருக் கானை மீண்டும் வாங்கினார்.

வாங்கிய வீரர்கள் : ஷிக்கர் தவான் ( 8.25 கோடி ) ரபாடா ( 9.25 கோடி ) ஷாருக் கான் ( 9 கோடி ) ஜானி பேரிஸ்டோ ( 6.75 கோடி ) ராகுல் சாஹர் ( 5.25 கோடி ) ஹர்பிரீத் பிரார் ( 3.8 கோடி ) ஜித்தேஷ் ஷர்மா ( 20 லட்சம் ) பிரப்சிம்ரன் சிங் ( 60 லட்சம் ) இஷான் போரேல் ( 25 லட்சம் )

மீதமுள்ள தொகை : 28.65 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஏலத்தில் இரண்டாவது அதிக பணம் கொண்ட அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முதல் இரண்டு பட்டியலில் எந்த ஒரு வீரர்களையும் வாங்காமல் இருந்ததால் ரசிகர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். முதல் வீரராக தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது. இளம் வீரர்கள் கொண்ட வலிமையான அணியை அமைத்துள்ளது.

வாங்கிய வீரர்கள் : நிக்கோலஸ் பூரன் ( 10.75 கோடி ) ராகுல் திரிப்பாதி ( 8.5 கோடி ) வாஷிங்டன் சுந்தர் ( 8.75 கோடி ) அபிஷேக் ஷர்மா ( 6.5 கோடி ) நட்ராஜன் ( 4 கோடி ) புவனேஷ்வர் குமார் ( 4.2 கோடி ) கார்த்திக் தியாகி ( 4 கோடி ) பிரியம் கர்க் ( 20 லட்சம் ) ஷ்ரேயாஸ் கோபால் ( 75 லட்சம் ) ஜெகதீஷ் சுச்சித் ( 20 லட்சம் )

மீதமுள்ள தொகை : 20.35 கோடி

குஜராத் டைட்டன்ஸ்

புதிய அணியான குஜராத் முதல் நாள் ஏலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். ஆனாலும் சிறப்பான வீரர்களை நன்கு செலவு செய்து அணிக்குள் வாங்கிப் போட்டனர். தமிழக வீரர் சாய் கிஷோர் இவ்வணியால் வாங்கப்பட்டார். அடிப்படை விலையில் ஜேசன் ராய்யை எடுத்து அமர்காளப்படுத்தியது.

வாங்கிய வீரர்கள் : ராகுல் டிவாட்டியா ( 9 கோடி ) முஹம்மது ஷமி ( 6.25 கோடி ) லோக்கி பெர்குசன் ( 10 கோடி ) ஜேசன் ராய் ( 2 கோடி ) சாய் கிஷோர் ( 3 கோடி ) அபினவ் மனோகர் சதரங்கனி ( 2.6 கோடி ) நூர் அஹமத் ( 30 லட்சம் )

மீதமுள்ள தொகை : 18.85 கோடி