2022 ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு காத்திருக்கும் 590 வீரர்கள் – எந்தெந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் என்ற முழு லிஸ்ட்

0
99
IPL Mega Auction 2022

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்பதால் இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. வழக்கமாக 8 அணிகளுக்கு பதிலாக இந்த முறை 10 அணிகள் பங்கேற்கும் என்று முன்னரே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி 2 புதிய அணிகளாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைக்கப்பட்டன. முறையே லக்னோ அணிக்கு கேப்டனாக ராகுல் மற்றும் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த இரண்டு அணிகளுமே ஏலம் தொடங்குவதற்கு முன்னரே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி லக்னோ அணியில் ராகுல் ஸ்டோனிஸ் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல அகமதாபாத் அணியில் ஹர்திக், கில் மற்றும் ரஷித் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த ஏலத்தில் பங்குகொள்ள உலகமெங்கிலும் இருந்து சுமார் 590 வீரர்கள் தங்களது பெயர்களை கொடுத்துள்ளனர். அவற்றுள் 370 பேர் இந்திய வீரர்களாகவும் 220 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் உள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து சுமார் 47 வீரர்கள் ஏலத்தில் பங்கு பெற இருக்கின்றனர். அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் இருந்து 34 வீரர்களும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 33 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து 24 வீரர்களும் நியூசிலாந்து நாட்டில் இருந்து 23 வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் 17 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதுபோக வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 5 வீரர்களும், நமிபியா மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளிலிருந்து முறையே 3 மற்றும் 2 வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஜிம்பாவே நேபாள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தலா ஒரு வீரர் பங்கேற்க உள்ளார்.

இந்த முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் நிச்சயமாக பல வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலம் போவார்கள். தற்போதே ஏலம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய விருப்பங்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -