ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறிவைக்க இருக்கும் 3 வீரர்கள் – ஆர்சிபி அணி சம்பந்தப்பட்ட ரகசிய அப்டேட் வெளியீடு

0
1078
RCB IPL Auction 2022

2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நடந்து முடிந்த 14 ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியதில்லை. மூன்று முறை அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அந்த அணியால் ஒருமுறைகூட இறுதி போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.

இந்த ஆண்டு அந்த அணி புதிய கேப்டனுடன் களமிறங்க இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க படுவதற்கு முன்பாகவே விராட் கோலி இந்த ஆண்டுடன் நான் எனது கேப்டன் பதவியை முடித்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி இந்த ஆண்டு அந்த அணியின் கேப்டன் பதவி எந்த வீரருக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்பொழுதே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

- Advertisement -

மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அந்த அணி தனது பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. விராட் கோலியை 15 கோடி ரூபாய்க்கும் மேக்ஸ்வெல்லை 11 கோடி ரூபாய்க்கும் முகமது சிராஜை 7 கோடி ரூபாய்க்கும் பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் குறி வைக்கும் வீரர்கள்

மெகா ஏலத்தில் அந்த அணி எந்தெந்த வீரர்களை கைப்பற்றப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுதே தொற்றிக் கொண்டது. சமீபத்தில் வந்த ரகசிய தகவலின் படி அந்த அணி 3 வீரர்களை குறிவைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர் ஜேசன் ஹோல்டர் இந்திய அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் அம்பத்தி ராயுடு மற்றும் ரியான் பராக் ஆகியோரை அந்த அணி குறி வைத்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர் ஜேசன் ஹோல்டரை கைப்பற்ற 12 கோடி ரூபாயையும், சென்னை அணியில் விளையாடிய அம்பத்தி ராயுடுவை கைப்பற்ற 8 கோடி ரூபாயையும், அதேபோல ராஜஸ்தான் அணியில் விளையாடிய ரியான் பராக்கை கைப்பற்ற 7 கோடி ரூபாயையும் அந்த அணி நிர்வாகம் தனியாக ஒதுக்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சில ஆண்டுகளில் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய அளவில் தடுமாறியது. அதன் காரணமாகவே மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய அம்பத்தி ராயுடு மற்றும் இளம் வீரர் ரியான் பராக்கை அந்த அணி கைப்பற்ற மிகப்பெரிய அளவில் போராடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல அந்த அணியில் நன்கு பந்து வீச தெரிந்த ஒரு ஆல்ரவுண்டர் வீரர் நீண்ட நாளாகவே இல்லாமல் இருந்தார். அந்த இடத்தில் ஜேசன் ஹோல்டரை விளையாட வைப்பதற்காகவே அதிக ரூபாயை அந்த அணி நிர்வாகம் தனியாக ஒதுக்கி வைத்துள்ளது நன்றாகவே நமக்கு புலப்படுகிறது. எனவே அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டபடி மேற்கூறிய மூன்று வீரர்களை மெகா ஏலத்தில் கைப்பற்றுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.