4 வீரர்கள்.. 4 வித்தியாசமான பிளேயிங் XI.. ரோகித் டிராவிட்டின் மெகா பிளான்.. டி20 உலக கோப்பை

0
841
Rohit

நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஏப்ரல் மாதம் கடைசியில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதில் ரிங்கு சிங் சேர்க்கப்படாதது விமர்சனமானது. ஆனாலும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சிறந்த திட்டம் ஒன்றை திட்டி இருக்கிறார்கள்.

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட அணியில் 10 பேர் எல்லா போட்டிகளுக்கும் நிரந்தரமாக விளையாட கூடியவர்களாக இருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஐந்து பேரில் சஞ்சு சாம்சானுக்கான வாய்ப்பு ரிஷப் பண்ட் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே கிடைக்கும். சஞ்சு சாம்சன் தவிர்த்த மற்ற நான்கு பேரைக் கொண்டு நான்கு விதமான பிளேயிங் லெவன்களை சூழ்நிலைக்கு தகுந்தபடி உருவாக்குவதற்கான அற்புதமான அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் என 10 வீரர்கள் பிளேயிங் லெவனில் உறுதியாக இடம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இதில் 11 வது வீரராக ஒரு முழுமையான வேகப் பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் முகமது சிராஜை சேர்த்துக் கொள்வார்கள். ஒரு பகுதி நேர மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால் சிவம் துபேவை சேர்த்துக் கொள்வார்கள். இப்படி வேகப்பந்துவீச்சுக்கான சூழ்நிலையை வைத்து இரண்டு விதமான பிளேயிங் லெவனை உருவாக்க முடியும்.

அதே சமயத்தில் 11 வது வீரராக ஒரு முழுமையான ஸ்பின்னர் வேண்டுமென்றால் சாகலை தேர்வு செய்வார்கள். அதே சமயத்தில் ஒரு ஸ்பின்னிங் ஆல் ரவுண்டர் தேவை என்றால் அக்சர் படேலை தேர்வு செய்வார்கள். இந்த வகையில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இரண்டு விதமான பிளேயிங் லெவன்களை உருவாக்க முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. இந்தியாவில் எந்த தொலைக்காட்சியில் எந்த நேரத்தில் பார்க்கலாம்.. முழு தகவல்கள்

இப்படி இந்த நான்கு வீரர்களையும் வைத்து வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நான்கு விதமான பிளேயிங் லெவனை உருவாக்குவதற்கு வசதியான வீரர்களையே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். தற்பொழுது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த மெகா பிளான் கிரிக்கெட் வல்லுனர்களால் பெரிய அளவில் புகழப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என உறுதியாக கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.