டி20 உலக கோப்பை.. இந்தியாவில் எந்த தொலைக்காட்சியில் எந்த நேரத்தில் பார்க்கலாம்.. முழு தகவல்கள்

0
27461
Rohit

கிரிக்கெட் உலகம் ஐபிஎல் தொடர் முடிந்து ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை நோக்கி நகர்ந்து இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்குகிறது. இந்திய அணி முதல் சுற்றில் விளையாடும் போட்டிகளில் மைதானம் மற்றும் நேரம் ஆகியவற்றை பார்க்கலாம்.

இந்த முறை 20 அணிகளை கொண்டு, நான்கு பிரிவுகளாக, ஒரு பிரிவுக்கு ஐந்து அணிகள் என தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் அணிகள் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும்.

- Advertisement -

இப்படி நான்கு பிரிவில் இருந்தும் தேர்வாகும் மொத்தம் எட்டு அணிகளை கொண்டு சூப்பர் எட்டு சுற்று நடத்தப்படுகிறது. இந்தச் சுற்றில் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக நான்கு அணிகளாக பிரிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி வருகிறது. மேற்கொண்டு அதிலிருந்து இறுதிப் போட்டிக்கான அணிகள் வருகின்றன.

இதில் இந்திய அணி இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா என நான்கு அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் இந்திய அணி இந்த நான்கு அணிகளுக்கு எதிராகவும் தலா ஒரு போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணி தனது முதல் சுற்றில் விளையாடும் எல்லா போட்டிகளும் அமெரிக்காவில் விளையாடுகிறது.

மேலும் இந்திய அணி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு ஏதுவாக காலையில் அமெரிக்காவில் விளையாடுகிறது. அந்த நேரத்தில் இந்தியாவில் இரவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் எல்லா போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அமெரிக்க நேரப்படி மூன்று போட்டிகள் காலை 9.30 மணிக்கும், ப்ளோரிடா மாகாணத்தில் நடக்கும் ஒரு போட்டி மட்டும் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. ஆனால் இந்த போட்டியும் இந்திய நேரப்படி நாம் இரவு 8 மணிக்கு பார்க்கலாம். மேலும் இந்தப் போட்டிகளை டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஆன்லைனில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் கிரிக்கெட் வரலாறு.. ஒருமுறை கூட சிஎஸ்கே ஜெயிக்காத 3 விருதுகள்.. அரிய நிகழ்வு

ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து நியூயார்க் மைதானம்
ஜூன் 8ஆம் தேதி பாகிஸ்தான் நியூயார்க் மைதானம்
ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா நியூயார்க் மைதானம்
ஜூன் 15ஆம் தேதி கனடா ப்ளோரிடா மைதானம்