இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கே எல் ராகுல் தயாராகிய விதம் மிகவும் அற்புதமானது என்றும், அவர் பொறுப்பை எடுத்துக் கொண்ட விதம் பாராட்டுக்குரியது எனவும் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி பாராட்டி இருக்கிறார்.
இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கேஎல்.ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாமாகவே இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு முன்கூட்டியே இங்கிலாந்து சென்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தையை விட நாடு பெரியது
கேஎல்.ராகுல் மனைவிக்கு முதல் குழந்தை இந்த வருடம் மார்ச் மாதம் பிறந்தது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடருக்கு கொஞ்சம் தாமதமாக வந்தார். ஆனால் வீட்டில் பிறந்த குழந்தை இருந்தபோதும் கூட, தனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுத்திருந்தும், கேஎல் ராகுல் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் தாமாக கேட்டு இங்கிலாந்து சென்று பயிற்சி போட்டியில் விளையாடினார்.
இதுகுறித்து ஹேமங் பதானி கூறும் பொழுது “நான் முன்கூட்டியே இங்கிலாந்துக்கு செல்ல போகிறேன். ஒரு பயிற்சி போட்டியில் விளையாட போகிறேன் என்று சொன்னார். அவரிடமிருந்து வந்த சதத்தை மறந்து விடுங்கள். அதற்கு முன்பாக அவர் காட்டிய நோக்கத்தை பாருங்கள். இந்த நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருந்தது. நிச்சயமாக குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் இங்கிலாந்து செல்வார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் குழந்தையை விட நாடு பெரியது என்று சென்றார்”
கேஎல்.ராகுல் ஏமாற்றவில்லை
“ஒரு மூத்த நான் நேரடியாக இங்கிலாந்து சென்று டெஸ்ட் போட்டியில் நேரடியாக விளையாடுகிறேன் என்று சொல்லி இருக்க முடியும். அவர் இந்திய ஏ அணியில் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும் அவர் சென்று விளையாடினார்”
இதையும் படிங்க : ஒரே ஒரு மாற்றத்தை செய்ங்க.. எங்க பங்காளி இங்கிலாந்த சும்மா ஜெயிக்கலாம் – ஆஸி கிளார்க் அறிவுரை
“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் கேஎல்.ராகுல்தான் மூத்த வீரராக இருந்தார். எனவே மூத்த வீரராக இந்த அணிக்கு நான் இருக்கிறேன் என அவராகவே பொறுப்பை எடுத்துக் கொண்டார். சிறப்பாக விளையாடி பொறுப்பை நிரூபித்தும் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






