எங்க பாகிஸ்தான் டீம் சர்வதேச டீம் மாதிரி இல்ல.. நான் ஓவல்ல அந்த உண்மையை பார்த்தேன் – பாக் முன்னாள் வீரர் யாசிர் அராபத் பேட்டி

0
153
Arafat

பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரிலிருந்து பெரிய சரிவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடைசி இங்கிலாந்து டி20 கிரிக்கெட் சுற்றுப்பயணமும் பெரிய தோல்வியில் முடிந்திருக்கிறது. இதுகுறித்து 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு விளையாடிய முன்னாள் வீரர் யாசிர் அராபத் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியை எடுத்துக்கொண்டால் கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நல்ல விதமாகவே செயல்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக மாறியது.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியவர்கள், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து சொந்த நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கடுமையாக போராடி சமன் செய்தார்கள். தற்பொழுது இங்கிலாந்தில் டி20 தொடரை இழந்தார்கள்.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் யாசிர் அராபத் ” நான் பாகிஸ்தானில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போது ஓவர் மைதானத்தில் இருந்தேன். இங்கிலாந்து அணி ஒரு தொழில் முறை அணியாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி ஒரு கற்றுக் குட்டி அணி போல இருந்தது. இது குறித்து அங்கு போட்டியை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலும் கடுமையான விமர்சனங்கள் இருந்தது.

பாகிஸ்தான் அணி விளையாடியது தொழில் முறை கிரிக்கெட் கிடையாது. கிரிக்கெட் உலகம் முன்னேறி சென்று இருக்கிறது ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் பின்னே இருக்கிறது. அவர்கள் உடல் தகுதி கேப்டன்சி என எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதனால் அவர்களது மன உறுதியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருவார்கள் என்று பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் வெஸ்ட் இண்டீஸ் டீம்ல இருந்திருந்தா.. இந்த பிளேயர திட்டியே இருப்பேன் – இர்பான் பதான் விமர்சனம்

பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மீண்டும் கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான அணி இப்படியான நிலையில் இருக்கும் போது பாபர் அசாம் டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்பார்த்த மிகவும் உற்சாகமாகவும் ஆவலாகவும் காத்துக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.